முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கோயம்புத்தூரில் தங்கியிருக்கும் நடிகை நிக்கி கல்ரானி... காரணம் இதுதானா ?

கோயம்புத்தூரில் தங்கியிருக்கும் நடிகை நிக்கி கல்ரானி... காரணம் இதுதானா ?

நடிகை நிக்கி கல்ராணி

நடிகை நிக்கி கல்ராணி

ஈஷா யோகா மையத்தில் சில நாட்களாக ரிட்ரீட் புரோகிராமிற்காக நடிகை நிக்கி கல்ரானி தங்கியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழ், தெலுங்கு ,கன்னடா, மலையாளம் நான்கு மொழிகளிலும் பிசியாக இருப்பவர் நிக்கி கல்ரானி. இவர் தமிழ் சினிமாவில் 2014 ஆண்டு ' டார்லிங்' திரைப்படம் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே தனக்கேன ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். பின்பு தொடர்ந்து யாகவராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, ஹர ஹர மகாதேவி என பல படங்களில் நடித்துள்ளார்.

கொரோனா தொற்றால் சில மாதங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட  நிக்கி கல்ரானி தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு கொரோனாவிலிருந்து குணமடைந்தார். இந்நிலையில் கோயம்பத்தூரில் இருக்கும் ஈஷா யோகா மையத்தில் சில நாட்களாக ரிட்ரீட் புரோகிராமிற்காக தங்கியுள்ளார். அனைத்திலிருந்தும் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொள்ளவே நிக்கி கல்ரானி இங்கே சென்றுள்ளதாக கூறப்படுகிறது. நிக்கி கல்ரானி நடித்துள்ள ராஜவம்சம், வட்டம் ஆகிய இரண்டு படங்களும் 2021 ஆண்டு வெளியாகலாம்.

ஏற்கனவே தமன்னா, நிக்கி கல்ரானி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் நடிகை ராகுல் ப்ரீத் சிங் கொரோனா தொற்றால் தற்போது பாதிக்கப்பட்டு தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். ரகுல் ப்ரீத் சிங் விரைவில் குணமடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actress, Corona, Nikki Galrani