காதலர் தினத்தில் நடிகரை திருமணம் செய்யும் ’மெர்சலாயிட்டேன்’ பாடகி

பாடகி நீதிமோகன்

தற்போது கங்கணா ரணாவத் நடிப்பில் வெளியான மணிகர்னிகா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நிஹர் பாண்ட்யா நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

  • News18
  • Last Updated :
  • Share this:
பாடகி நீதிமோகன் நடிகர் நிஹர் பாண்ட்யாவை காதலர் தினத்தன்று திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சங்கர் இயக்கத்தில் வெளியான ’ஐ’ படத்தில் இடம்பெற்ற மெர்சலாயிட்டேன் என்ற பாடல் மூலம் அனைவரது மனதையும் கவர்ந்தவர் பாடகி நீதிமோகன். பின்னர் ரஜினியின் ’லிங்கா’ படத்தில் இடம்பெற்ற மோனா கேஸ்லினோ, விஜய் சேதுபதியின் நானும் ரவுடி தான் படத்தில் இடம்பெற்ற ’நீயும் நானும்’, கோ2 படத்தில் இடம்பெற்ற ’கோஹிலா’, தெறி படத்தில் இடம் பெற்ற ’செல்லாகுட்டி’ உள்ளிட்ட பல பாடல்களை பாடி தற்போது முன்னணி பாடகிகளில் ஒருவராக உள்ளார்.

38 வயதாகும் நீதிமோகன் தனது நெருங்கிய நண்பரும் நடிகருமான நிஹர் பாண்ட்யாவை காதலர் தினத்தன்று திருமணம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் நிஹர் பாண்ட்யா தீபிகா படுகோனேவை காதலித்ததாக வந்த வதந்தியில் சிக்கியவர். மேலும் தற்போது கங்கணா ரணாவத் நடிப்பில் வெளியான மணிகர்னிகா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நிஹர் பாண்ட்யா நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

வடிவேலுவின் பேட்ட - வீடியோ

Published by:Sheik Hanifah
First published: