Nidhhi Agerwal: உணவு, கல்வி வழங்குங்கள் - கோவில் கட்டும் ரசிகர்களுக்கு பிரபல நடிகை வேண்டுகோள்

Nidhhi Agerwal: உணவு, கல்வி வழங்குங்கள் - கோவில் கட்டும் ரசிகர்களுக்கு பிரபல நடிகை வேண்டுகோள்

நடிகை நிதி அகர்வால்

தனக்கு கட்டும் கோவிலை ஆதரவற்றவர்களுக்கு தங்குமிடமாகவும், உணவு, கல்வி கொடுக்கும் இடமாகவும் மாற்றிடுங்கள் என ரசிகர்களுக்கு நிதி அகர்வால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • Share this:
    2017-ம் ஆண்டு இந்தியில் வெளியான முன்னா மைக்கேல் படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானவர் நிதி அகர்வால். அதைத்தொடர்ந்து தெலுங்கில் இஸ்மார்ட் சங்கர், மிஸ்டர் மஞ்சு உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் தமிழில் சிம்புவுடன் ஈஸ்வரன், ஜெயம் ரவியுடன் பூமி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து வரும் நிதி அகர்வால் மகிழ்திருமேனி இயக்க இருக்கும் புதிய படத்திலும் நடிக்க இருக்கிறார்.

    தமிழில் நிதி அகர்வால் நடித்து இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகியிருக்கும் நிலையில் சென்னை காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரசிகர்கள் கோவில் கட்ட முடிவெடுத்து நிதி அகர்வாலுக்கு சிலை செய்து பாலாபிஷேகம் செய்தனர்.





    இதையறிந்த நடிகை நிதி அகர்வால் தனது ட்விட்டர் பதிவில், ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அளவற்ற அன்பை நினைத்து பூரிப்படைகிறேன். எனக்கு எப்போதும் ஆதரவு அளித்திருக்கிறார்கள். எனது ரசிகர்கள் எனக்காக கட்டும் கோவிலை ஆதரவற்றவர்களுக்கு தங்குமிடமாகவும், உணவு கல்வி கொடுக்கும் இடமாகவும் மாற்றிட வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.
    Published by:Sheik Hanifah
    First published: