சிம்பு, ஜெயம் ரவியை தொடர்ந்து பிரபல நடிகருக்கு ஜோடியான நிதி அகர்வால்

சிம்பு, ஜெயம் ரவியை தொடர்ந்து பிரபல நடிகருக்கு ஜோடியான நிதி அகர்வால்

நிதி அகர்வால்

இந்தியில், முன்னா மைக்கேல் என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நிதி அகர்வால்.

 • Share this:
  சிம்பு, ஜெயம் ரவியை தொடர்ந்து மீண்டும் பிரபல ஹீரோவுக்கு ஜோடியாகியிருக்கிறார் நடிகை நிதி அகர்வால்.

  பொங்கலுக்கு சிம்புவின் ’ஈஸ்வரன்’ வெளியானது. ஓடிடி-யில் ஜெயம் ரவியின் ‘பூமி’ திரைப்படம் வெளியானது. இந்த 2 படங்களிலும் ஹீரோயினாக நடிகை நிதி அகர்வால் நடித்திருந்தார். இரண்டு படங்களுமே கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

   

  Nidhhi Agerwal Joins Pawan Kalyan 27
  பவன் கல்யாண் படத்தில் நிதி


  இந்தியில், முன்னா மைக்கேல் என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நிதி அகர்வால். பின்னர் தென்னிந்திய சினிமாவுக்கு பெட்டியைக் கட்டிய அவர், சவ்யாசாச்சி, மிஸ்டர் மஞ்சு ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் அந்தப் படங்கள் பெரிதாக ஹிட்டாகவில்லை. இதையடுத்து ஐஸ்மார்ட் சங்கர் என்ற படத்தில் நடித்தார். ராம், நபா நடேஷ் உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. புரி ஜெகநாத் இயக்கியிருந்தார். இதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவுக்கு வந்தார்.

  இந்நிலையில் தற்போது தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் 27-வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். கிரிஷ் இயக்கும் இந்தப் படம் வரலாற்றுப் பின்னணியில் உருவாகிறது. ஏ.எம்.ரத்னம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படம், தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் உருவாக இருக்கிறது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: