Home /News /entertainment /

#NGKTeaser சூர்யாவின் என்.ஜி.கே - டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு - மகிழ்ச்சியில் ரசிகர்கள்

#NGKTeaser சூர்யாவின் என்.ஜி.கே - டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு - மகிழ்ச்சியில் ரசிகர்கள்

NGK படத்தின் போஸ்டர்

NGK படத்தின் போஸ்டர்

கடந்த மாதம் 13-ம் தேதி படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

  • News18
  • Last Updated :
என்.ஜி.கே. படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இயக்குநர் செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் உருவாகும் படம் என்.ஜி.கே. இந்தப் படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர். நந்த கோபாலன் குமரன் (சுருக்கமாக என்.ஜி.கே.) என்ற இப்படத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கிறார். கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கிய இந்தப் படம் 2018-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவரும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.ஆனால் சில காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப்போனது.

இதனால் படத்தை ரிலீஸ் செய்வது தாமதமானது. சூர்யா - செல்வராகவன் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்திருந்தது. இதனால் சமூகவலைதளங்களில் படக்குழுவினரிடம் படம் குறித்த அப்டேட்டை வெளியிடுமாறு ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

கடந்த மாதம் 13-ம் தேதி படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி படத்தின் டீசர் பிப்ரவரி மாதம் 14-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



நீண்ட நாட்களாக படம் குறித்த அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்கள் இந்த செய்தி கேட்டு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வடிவேலுவின் பேட்ட - வீடியோ

Published by:Sheik Hanifah
First published:

Tags: Actor Surya, NGK

அடுத்த செய்தி