• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • என்.ஜி.கே: சாட்டிலைட் & டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

என்.ஜி.கே: சாட்டிலைட் & டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

என்.ஜி.கே படத்தில் சூர்யா

என்.ஜி.கே படத்தில் சூர்யா

  • News18
  • Last Updated :
  • Share this:
    என்.ஜி.கே படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    இயக்குநர் செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள படம் என்.ஜி.கே. இந்தப் படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருக்கிறார். படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர்.

    நந்த கோபாலன் குமரன் (சுருக்கமாக என்.ஜி.கே.) என்ற இந்தப் படத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கிறார். கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கிய இந்தப் படம் 2018-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவரும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

    ஆனால், சில காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. இதனால் படத்தை ரிலீஸ் செய்வது தாமதமானது. எப்போது படம் வெளியாகும் எனக் காத்திருந்த ரசிகர்களுக்கு படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி உற்சாகமூட்டின.

    இதற்கான வியாபாரம் முடிந்துவிட்ட நிலையில் தற்போது இந்தப் படம் தென்கொரியாவிலும் ரிலீஸாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தென்கொரியாவில் வெளியாகும் முதல் தமிழ்ப்படம் என்ற சாதனையை என்.ஜி.கே நிகழ்த்தியுள்ளது.



    மேலும் அமெரிக்காவில் இந்தப் படம் 30-ம் தேதியே வெளியாகிறது. அதற்கான திரையரங்கு பட்டியலையும் படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டிவியும், டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் வீடியோவும் பெற்றுள்ளது. இதை படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.



    சூர்யா - செல்வராகவன் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது.

    வீடியோ பார்க்க: கவுண்டமணி வாழ்க்கைக் கதை!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: