Home /News /entertainment /

பட வெளியீட்டு சிக்கலுக்கு இது தான் காரணம்...`என்.ஜி.கே’ பட தயாரிப்பாளர்!

பட வெளியீட்டு சிக்கலுக்கு இது தான் காரணம்...`என்.ஜி.கே’ பட தயாரிப்பாளர்!

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    பட வெளியீட்டில் ஏற்படும் சிக்கலுக்கான 6 முக்கிய காரணங்களை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு வெளியிட்டுள்ளார்.

    நடிகர் விஜய் சேதுபதி த்ரிஷா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘96’ படம் நேற்று திட்டமிட்டபடி காலைக்காட்சிகள் வெளியாகாமல் பைனான்ஸ் பிரச்னையில் சிக்கியது. இந்த விவகாரத்தில் நடிகர் விஜய் சேதுபதி தலையிட்டு தீர்த்து வைத்துள்ளார். அதன் பின்னர் படம் ரிலீசானது.

    இந்நிலையில் இப்பிரச்னைக்கு நடிகர் விஷால் தான் காரணம் என்று கூறியிருந்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இந்தப் பிரச்னைக்கான காரணிகளை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பட்டியலிட்டுள்ளார். அதில், ``1.வர்த்தக பார்வையுடன் சில விஷயங்களில் இருந்து ஒதுங்கி நிற்கத் தவறுதல். 2.ஒரு படம் ஹிட் ஆகுமா என்பது உறுதியற்று இருக்கும்போது அந்தப் படத்துக்கு சூப்பர் ஹிட் பிஸினஸ் நோக்கத்துடன் பட்ஜெட் திட்டமிடுதல். 3. முக்கிய வேடங்களில் நடிப்பவர்களுக்கு படத்தின் பட்ஜெட்டில் 20 சதவீதத்திற்கு மேல் சமபளமாக வழங்க ஒப்புதல் அளித்தல். 4. தவறான தயாரிப்பு முறைகளால் பட்ஜெட்டில் 10 சதவீதத்தை இழத்தல். 5. அதீத வட்டிகள் மற்றும் கதையைத் தாண்டியும் விளம்பரத்தை அதிகமாக நம்புதல். 6. தேவையற்ற நிர்வாக செலவினங்கள் மற்றும் ஒழுக்கமின்மை. நான் கூறிய பிரச்னைகளில் தயாரிப்பாளர் கவனம் செலுத்த வேண்டுமே தவிர ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதில் அல்ல” என்று கூறியுள்ளார்.

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: 96 movie, NGK Producer, S.R.Prabhu, Vijay sethupathi

    அடுத்த செய்தி