என்.ஜி.கே படம் குறித்த புதிய தகவலை படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் செல்வராகவன் சூர்யா கூட்டணியில் உருவாகும் என்.ஜி.கே படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்து வருகின்றனர். யுவன் சங்கர்ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா முதல்முறையாக நடிப்பதால் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் படத்தின் பணிகள் முடிவடியாத காரணத்தினால் ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் அறிவித்தனர்.
இதனிடையே என்ஜிகே படம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சூர்யா, ``மக்களிடையே நல்ல சிந்தனைகளை கொண்டு செல்ல என்.ஜி.கே திரைப்படத்தை தேர்வு செய்தேன். தீபாவளிக்கும், பொங்கலுக்கும் ரிலீசாக என்.ஜி.கே பட்டாசும் இல்லை, பொங்கலும் இல்லை. படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காகத்தான் ரிலீஸ் தேதி தள்ளி போயிருக்கிறது. தயாரிப்பாளர் தரப்பும் அவர்களது கடமையை சிறப்பாக செய்து வருகின்றனர். இந்த படம் வழக்கமான ஒன்றாக இருக்காது” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் படத்தின் புதிய அப்டேட்டை படத்தின் தயாரிப்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ``செப்டம்பர் மாதம் முடிவுக்கு வந்த நிலையில், அக்டோபர் மாதத்தில் என்ஜிகே குறித்த புதிய அப்டேட்கள் வெளியாகும் என தெரிவித்துள்ளார். மேலும் அந்த பதிவில், ``குருபெயர்சிக்கு அப்புறம் எல்லாரும் குணமா வாயால சொல்லனும் முருகா” என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.
Hey guys... September is coming to an end without much to update on #NGK We can assure few updates in October😁
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.