• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • எல்லாத்தையும் தட்டிக் கேக்குற உரிமை இருக்கு - தெறிக்கும் என்.ஜி.கே ட்ரெய்லர் வீடியோ

எல்லாத்தையும் தட்டிக் கேக்குற உரிமை இருக்கு - தெறிக்கும் என்.ஜி.கே ட்ரெய்லர் வீடியோ

நந்த கோபாலன் குமரன் (சுருக்கமாக என்.ஜி.கே.) என்ற இப்படத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கிறார்.

நந்த கோபாலன் குமரன் (சுருக்கமாக என்.ஜி.கே.) என்ற இப்படத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    என்.ஜி.கே படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்களை வெளியிட்டுள்ளது படக்குழு.

    இயக்குநர் செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள படம் என்.ஜி.கே. இந்தப் படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர்.

    நந்த கோபாலன் குமரன் (சுருக்கமாக என்.ஜி.கே.) என்ற இந்தப் படத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கிறார். கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கிய இந்தப் படம் 2018-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவரும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

    ஆனால், சில காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. இதனால் படத்தை ரிலீஸ் செய்வது தாமதமானது. சூர்யா - செல்வராகவன் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்திருந்தது.

    கடந்த ஜனவரி மாதத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து பிப்ரவரி மாதத்தில் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தின் முதல் பாடல் ஏப்ரல் 12-ம் தேதி வெளியான நிலையில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்களை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.



    மே 31-ம் தேதி என்.ஜி.கே படம் திரைக்கு வருகிறது.

    நட்சத்திர விடுதியில் என்.ஜி.கே ட்ரெய்லர் விழா! உற்சாகத்தில் சூர்யா, செல்வராகவன்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: