Home /News /entertainment /

என்.ஜி.கே படத்தின் முதல் பாடல்: ரிலீஸ் தேதி அறிவிப்பு

என்.ஜி.கே படத்தின் முதல் பாடல்: ரிலீஸ் தேதி அறிவிப்பு

கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கிய இந்தப் படம் 2018-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவரும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.ஆனால் சில காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. இதனால் படத்தை ரிலீஸ் செய்வது தாமதமானது. 

கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கிய இந்தப் படம் 2018-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவரும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.ஆனால் சில காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. இதனால் படத்தை ரிலீஸ் செய்வது தாமதமானது. 

  • News18
  • Last Updated :
    என்.ஜி.கே படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

    இயக்குநர் செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் உருவாகும் படம் என்.ஜி.கே. இந்தப் படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர். நந்த கோபாலன் குமரன் (சுருக்கமாக என்.ஜி.கே.) என்ற இந்தப் படத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கிறார்.

    கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கிய இந்தப் படம் 2018-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவரும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

    ஆனால் சில காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. இதனால் படத்தை ரிலீஸ் செய்வது தாமதமானது. சூர்யா - செல்வராகவன் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்திருந்தது.கடந்த ஜனவரி மாதத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து பிப்ரவரி மாதத்தில் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

    மே 31-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் முதல் பாடல் ஏப்ரல் 12-ம் தேதி வெளியாகும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.



    வீடியோ பார்க்க: பிரசாரத்தின்போது மயங்கிய மன்சூர் அலிகான்!






    சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Actor Surya, NGK

    அடுத்த செய்தி