நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் அடுத்த ட்விஸ்ட் ..எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் ‘மாறன்’ என்ற புதிய கதாப்பாத்திரம் என்டிரி கொடுக்க இருப்பதை மாயன் தன்னுடைய ஸ்டைலில் அறிவித்துள்ளார்.

  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ’நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. முத்துராசுவைக் கொலை செய்தது யார்? என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. காவல்துறையும் துருவி துருவி விசாரணை செய்து வருகிறது. சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாக முத்துராசு கொலையை வைத்தே எபிசோடுகளை நகர்த்திவிட்டனர்.

பெரும் எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கும் எப்போது தான் முத்துராசு கொலையாளியை காண்பிப்பீர்கள்? என்ற ரேஞ்சுக்கு வந்துவிட்டனர். இந்த நேரத்தில் புதிய கதாப்பாத்திரத்தை இறக்கியுள்ளனர். மாயனாக நடித்து வரும் செந்தில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘மாறன்’ வருகையை அறிவித்துள்ளார்.

நாம் இருவர் நமக்கு இருவர் முதல் அத்தியாயத்தில் இரண்டு கேரக்டரில் நடித்த செந்தில், இந்த பாகத்தில் ‘மாயன்’ என்ற ஒரே கதாப்பாத்திரத்தில் மட்டுமே நடித்து வருகிறார். தற்போது மாறன் என்ற கதாப்பாத்திரத்திலும் அவர் நடிக்க இருப்பது, இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் உறுதியாகியுள்ளது. மங்காத்தா பேக்ரவுண்டு மியூசிக்கில் சும்மா மாஸாக ‘மாறன்’ என்ட்ரி கொடுக்கிறார். ஆனால், மாறன் எபிசோடு எப்போது ஒளிபரப்பாகப் போகிறது? மாறன் என்ன செய்யப்போகிறார்? என்பது தான் டிவிஸ்ட்.

முத்துராசு கொலையாளிக்கும் அவருக்கு என்ன தொடர்பு என்பதும் விரைவில் தெரியப்போகிறது. முத்துராசுவைக் கொலை செய்தது மாயனாக இருக்கலாம் என சந்தேகித்த போலீஸ், தற்போது அவன் கொலை செய்யவில்லை என்பதை உறுதி செய்துள்ளனர். அவனுக்கு முத்துராசு கொலையாளியை தெரியும் எனவும் போலீஸ் யூகித்துள்ளனர். தனக்கு வேண்டப்பட்டவரை காப்பாற்றுவதற்காக முத்துராசு கொலைப் பழியை மாயன் சுமக்கிறார் என அறிந்து கொள்ளும் காவல்துறை, அதனைக் கண்டுபிடிக்க பகீரத முயற்சியில் இறங்கியுள்ளது.

Also Read : க்யூட்டாக போஸ் கொடுத்த நடிகை ப்ரியா ஆனந்த்-போட்டோஸ் 
View this post on Instagram

 

A post shared by Mirchi Senthil (@mirchisenthil983)

  Also Read : ரோஜா சீரியல் செய்த மற்றொரு சாதனை - ரசிகர்கள் கொண்டாட்டம்

நாச்சியராக இருக்கலாம் என சந்தேகித்தபோது, சூழ்நிலைகளின் அடிப்படையில் அவர் முத்துராசுவைக் கொலை செய்ய வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர். ஐஸ்வர்யா அல்லது காயத்திரி ஆகியோர் மீது காவல்துறைக்கு பலமான சந்தேகம் இருக்கிறது. கத்தி, சிதம்பரம், காயத்திரி ஆகியோரும் முத்துராசு கொலையாளிகள் லிஸ்டில் இன்னும் இருக்கின்றனர். இந்த கொலை விசாரணையை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி கார்த்திக், பிரத்யேகமாக முத்துராசு கொலையை கையாண்டு வருகிறார்.

இதில் இருக்கும் டிவிஸ்டுகள் ஒவ்வொன்றும் கண்டுபிடிப்பதற்கு சவாலாக இருப்பதால், அந்த முடிச்சுகளை அவிழ்க்க முயற்சி செய்கிறார். அதே நேரத்தில் மாசாணிக்கு முத்துராசு கொலையாளியை தெரிந்து கொண்டு மாயனை மிரட்டத் தொடங்கியிருக்கிறார். ஒவ்வொரு பக்கமும் புதிய டிவிஸ்டுகள் அரங்கேறிக் கொண்டிருப்பதால், நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வாரத்தின் இறுதிக்குள் கொலையாளி யார்? என்பது தெரிந்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், மாறனின் என்ட்ரி புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: