Home » News » Entertainment » NEWS18 EXCLUSIVE RAJINI BROTHER OPEN UP RAJINI POLITCAL ENTRY VEL SKV

Exclusive | 'ரஜினி அரசியலுக்கு வந்தால், தமிழ்நாடு முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடுவேன்'.. ரஜினிகாந்தின் அண்ணன் சத்திய நாராயணராவ்..

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து அவரது அண்ணன் சத்தியநாராயண ராவ் நியூஸ்18க்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், ரஜினி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று எனக்கு கூட தெரியாது. அவர் தான்" சொல்ல வேண்டும் ஆனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் என கூறியுள்ளார்.

Exclusive | 'ரஜினி அரசியலுக்கு வந்தால், தமிழ்நாடு முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடுவேன்'.. ரஜினிகாந்தின் அண்ணன் சத்திய நாராயணராவ்..
நடிகர் ரஜினிகாந்த், சத்தியநாராயண ராவ்
  • Share this:
நடிகர் ரஜினிகாந்த் கட்சி துவங்கினால் நானும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் உடன் சேர்ந்து தமிழ்நாடு முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடுவேன் என ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நியூஸ்18-க்கு ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாராயண ராவ் அளித்த பிரத்யேக பேட்டியில், நிச்சயமாக பிறந்தநாளுக்கு முன்பாகவே தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை ரஜினிகாந்த் தெரிவித்து விடுவார்.நேற்று ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைந்த பிறகு நடிகர் ரஜினிகாந்திடம் பேசினேன். அவர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று எனக்கு கூட தெரியாது. அவர் தான்" சொல்ல வேண்டும் ஆனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

கொரோனா காலம் என்பதால் மருத்துவர்கள் ஆலோசனையைத் தொடர்ந்து  ரஜினிகாந்த் கேட்டு வருகிறார். அதனாலேயே காலதாமதம் ஆகிறது. நிச்சயமாக பிறந்தநாளுக்கு முன்பாகவே தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை ரஜினிகாந்த் தெரிவித்து விடுவார்.


நடிகர் ரஜினிகாந்த் கட்சி துவங்கினால் நானும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் உடன் சேர்ந்து தமிழ்நாடு முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடுவேன். அவரது ரசிகர்கள் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைப்பதைப் போல நானும் நினைக்கிறேன். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். ஆனால்  ரஜினிகாந்த் என்ன சொல்லப்போகிறார் என்ற குழப்பம் எனக்கும் உள்ளது என தெரிவித்துளளார்.

ALSO READ |  வரும் சட்டப்பேரவை தேர்தலில் எனது பங்கு நிச்சயம் இருக்கும் - மு.க. அழகிரி

முன்னதாக ரஜினி காந்தின் அரசியல் பிரவேசம் குறித்து அவ்வப்போது கருத்துக்கள் வெளிவந்த நிலையில், கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை மேற்கொண்டார்.தனது அரசியல் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிக்க உள்ளதாக மக்கள் மன்ற நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் மன்ற நிர்வாகிகள், ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்தும், அரசியல் பிரவேசம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும், விரைவில் நல்ல முடிவு வரும் என்றும் தெரிவித்தனர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

 
First published: December 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading