சீரியல் பிரியர்களை மகிழ்விக்க வருகிறது ’தமிழும் சரஸ்வதியும்’-ஜூலை 12 முதல் விஜய் டிவியில் புதிய சீரியல்

ஜூலை 12 முதல் விஜய் டிவியில் புதிய சீரியல்

விஜய் டிவியில் ஜூலை 12 ஆம் தேதி முதல் 'தமிழும் சரஸ்வதியும்' என்ற புதிய தொடர் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

  • Share this:
தமிழில் முன்னணி பொழுபோக்கு தொலைக்காட்சியாக இருக்கும் விஜய் டிவியில் ஜூலை 12 ஆம் தேதி முதல் ’தமிழும் சரஸ்வதியும்’ என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. காதல் மற்றும் குடும்பத்தை மையமாக வைத்து உருவாகும் இந்த சீரியலில் சின்னத்திரை நடிகர் மற்றும் தொகுப்பாளர் என மக்களிடம் நன்கு அறிமுகம் பெற்றிருக்கும் தீபக் லீட் ரோலில் நடிக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜய் டிவிக்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சி எனவும் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருந்தார். புதிய சீரியலான தமிழும் சரஸ்வதியும் -க்கு மக்கள் மேலான ஆதரவை கொடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் அந்த சீரியல் ஒளிபரப்பாகும் நேரத்தை விஜய் டிவி அறிவித்துள்ளது. அடுத்த திங்கட்கிழமை முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு சீரியல் ஒளிபரப்பாகும். தமிழ் கதாபாத்திரத்தில் நடிக்கும் தீபக்கிற்கு ஜோடியாக சரஸ்வதி கதாபாத்திரத்தில் நக்‌ஷத்திரா நடிக்க உள்ளார். இவர்களுடன் மீரா கிருஷ்ணன் தமிழின் தாயாக கோதை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மகாலிங்கம் ராமச்சந்திரன் நடேசனாகவும் (தமிழ் தந்தை), பிரபு சொங்கலிங்கமாகவும் ( சரஸ்வதியின் தந்தை) நடிக்கின்றனர். ரேகா கிருஷ்ணப்பா தர்ஷ்ணா ஸ்ரீபால், நவீன் வெற்றி, யோகி உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கதைப்படி, சுறுசுறுப்பான பெண்ணாக இருக்கும் சரஸ்வதி அழகாகவும், சுட்டித்தனமாகவும் இருகிறார். 12 ஆம் வகுப்பு தேர்வில் வெற்றிபெற முடியாமல் திணறும் அவரை மற்றவர்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர். இந்த விமர்சனத்தில் இருந்து தப்பிக்க நினைக்கும் சரஸ்வதி, திருமணம் செய்துகொள்ள வேண்டும் என விரும்புகிறாள். படிக்காத பெண்ணாக இருப்பதால், அவரை பெண் பார்க்க வருபவர்கள் மணக்கொடை கேட்டு அடம்பிடிக்கின்றனர். ஏழை பெண்ணான சரஸ்வதியின் வீட்டில் அவர்கள் கேட்கும் மணக்கொடையை கொடுக்க வசதி இல்லை.

இது சரஸ்வதியின் வாழ்க்கையை மட்டுமல்லாமல் அவரின் குடும்பத்துக்கும் பெரும் நெருக்கடி மற்றும் கவலையைக் கொடுக்கிறது. அதேநேரத்தில் கதாநாயகனான தமிழ் மிகவும் பொறுப்பானவராக வளர்கிறார். சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடும் அவர் குடும்பத்தின் பொறுப்பை எடுத்துக்கொள்கிறார். தமிழும் படிக்காததால் நல்ல வரன் கிடைக்காமல் தமிழின் தாய் வருத்தத்தில் இருக்கிறார்.


இந்த நிலையில் தமிழும், சரஸ்வதியும் கோவிலில் சந்தித்துக்கொள்கின்றனர். தேர்வில் பாஸாக வேண்டும் என சரஸ்வதியும், படித்த மனைவி வேண்டும் என தமிழும் வேண்டிக் கொள்கின்றனர். தமிழ் வேண்டும்போது கடவுளின் அசரிரி குரல்போல் பேசும் சரஸ்வதி, உனக்கு நல்ல படித்த மனைவி கிடைக்கும் என கூறுகிறாள். புரோமோவில் இடம்பெற்றுள்ள இந்த காட்சிகள் நாடகத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இந்த நாடகத்தை இயக்குநர் குமரன் இயக்குகிறார்.

 
Published by:Tamilmalar Natarajan
First published: