• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விரைவில் வருகிறது புதிய பிரமாண்டமான ரியாலிட்டி ஷோ "Survivor" - ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

விரைவில் வருகிறது புதிய பிரமாண்டமான ரியாலிட்டி ஷோ "Survivor" - ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

Survivor

Survivor

உணவு, நீர் போன்ற அத்தியாவசிய மற்றும் அடிப்படை வசதிகளுக்காக போராடுவதும் இந்த சர்வைவர் ரியாலிட்டி ஷோவில் அடங்கும்.

  • Share this:
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான முன்னணி பொழுதுபோக்கு டிவி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். டிஆர்பி ரேட்டிங்கில் மற்ற டிவி சேனல்களுக்கு டஃ ப் கொடுக்கும் வகையில் பல கலக்கலான நிகழ்ச்சிகள் மற்றும் அதிரடி சீரியல்கள் என கலந்து கட்டி ஒளிபரப்பி தனெக்கென தனி சின்னத்திரை ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறது ஜீ தமிழ். நாளுக்கு நாள் ஜீ தமிழுக்கு ரசிகர்களும் அதிகரித்து வருகின்றனர். சின்னத்திரை ரசிகர்கள் இடையே தொடர்ந்து வரவேற்பை பெற்று வரும் ஜீ தமிழ் சீரியல் முதல் ரியாலிட்டி ஷோ வரை பலவற்றின் மூலம் தமிழக மக்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகிறது.

இதனிடையே தென்னிந்திய மற்றும் தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக சர்வைவர் (Survivor) என்ற வித்தியாசமான மற்றும் பிரமாண்டமான ரியாலிட்டி ஷோவை ஜீ தமிழ் ஒளிபரப்ப உள்ளது. உலகளாவிய பிரபலமான ரியாலிட்டி ஷோவான "சர்வைவர்" தனது சேனலில் ஒளிபரப்பாக போவது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை தனது சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளது ஜீ தமிழ். தனது அதிகார்ப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் "உலக மெகா Entertainment.... Coming soon..."என்று கேப்ஷன் கொடுத்து 'சர்வைவர்' நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ள தகவலை தெரிவித்துள்ளது சேனல் தரப்பு. சர்வைவர் - இது உயிர் வாழ்வதற்கான இறுதி போராட்டம் என்று குறிப்பிடப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தென்னிந்தியாவில் முதல் முறையாக டெலி பார்வையாளர்களை மகிழ்விக்க இந்நிகழ்ச்சி மூலம் ஜீ தமிழ் தயாராக உள்ளது. ஜீ தமிழின் "சர்வைவர்" உலகின் மிக வெற்றிகரமான ரியாலிட்டி ஷோ Survivor-உடன் ஒத்து போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வைவர் ரியாலிட்டி ஷோவானது ஒரு அழகான தீவில் நடைபெறும். இந்த ரியாலிட்டி ஷுவில் பங்கு பெறும் போட்டியாளர்கள் இந்த அழகான தீவில் தங்க வைக்கப்படுவார்கள். இந்த ஷோவில் பங்கேற்கும் அனைத்து போட்டியாளர்களும் இயற்கையின் பல்வேறு சக்திகளுக்கு எதிராக, தங்கள் வலிமையை பயன்படுத்தி போராட வேண்டும்.

உணவு, நீர் போன்ற அத்தியாவசிய மற்றும் அடிப்படை வசதிகளுக்காக போராடுவதும் இந்த சர்வைவர் ரியாலிட்டி ஷோவில் அடங்கும். சவாலான சூழல் நிறைந்த அழகிய தீவில் இருக்கும் போட்டியாளர்களுக்கு கூடுதலாக பல்வேறு டாஸ்க்களும் வழங்கப்படும். ரிவார்டுகளை பெறவும், எலிமினேஷனிலிருந்து தப்பிக்கவும் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் போராட வேண்டும். ஒரு மனிதன் உயிர் வாழ போராடும் வகையிலான இந்த இறுதி விளையாட்டு (சர்வைவர்), இந்த ரியாலிட்டி ஷோவில் பங்கேற்கும் போட்டியாளர்களின் மன மற்றும் உடல் வலிமையின் ஒவ்வொரு அம்சத்தையும் சோதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.



இந்த சர்வைவர் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்கும் போட்டியாளர்கள் வெவ்வேறு துறைகளில் இருந்து தேர்வு செய்யப்படுவார்கள். இந்நிகழ்ச்சியைத் தொடங்குவது குறித்து பேசிய ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட்டை சேர்ந்த சவுத் கிளஸ்டர் ஹெட்டான திரு சிஜு பிரபாகரன், " ரியாலிட்டிஎன்டர்டெயின்மென்ட்களில் புதுமையான மற்றும் மாறுபட்ட நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதன் மூலம் மக்களை ஈர்க்கும் முயற்சியில் தொடர்ந்து இருக்கிறோம்.

Also read... விஷாலுக்கு வில்லனாக விருப்பமா? - இதே ஒரு வாய்ப்பு...!

அந்த வகையில் இந்தியாவில் "சர்வைவர்" ஷோ நிச்சயமாக ரியாலிட்டி ஷோ வடிவங்களில் ஒரு புதிய வரையறையை ஏற்படுத்தும்" என்று நம்பிக்கை தெரிவித்தார். விரைவில் "சர்வைவர்" ஷோ தொடர்பான டீஸர்கள் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயற்கையான ஒரு தீவில் போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்க்குகள் கொடுக்கப்படுவதோடு மட்டுமின்றி, அவர்களுக்கான அடிப்படை தேவைகளை கூட அவர்களே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். பல்வேறு சவால்களை கடந்து யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதே Survivor-ன் கான்சப்ட் என்பதால் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் ஜீ தமிழின் புதிய அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: