ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

புதிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்க இருப்பதால் மீண்டும் தலைதூக்கும் VPF விவகாரம்..

புதிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்க இருப்பதால் மீண்டும் தலைதூக்கும் VPF விவகாரம்..

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் முரளி வெற்றிபெற்றபோது..

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் முரளி வெற்றிபெற்றபோது..

முரளி தலைமையிலான தயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்க இருப்பதால் VPF விவகாரம் மீண்டும் தலைதூக்கியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முரளி தலைமையிலான நிர்வாகத்தினர் செவ்வாய்க்கிழமை அமைச்சர் கடம்பூர் ராஜு முன்னிலையில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளாக பொறுப்பு ஏற்றுக்கொள்கிறார்கள். ஏற்கனவே VPF கட்டணத்தை நாங்கள் செலுத்த மாட்டோம் என தயாரிப்பாளர்கள் கூறிவந்த நிலையில், 60 சதவீத சலுகையை அளித்தது டிஜிட்டல் நிறுவனங்கள்.

இதனை பாரதிராஜா தலைமையிலான நடப்பு தயாரிப்பாளர் சங்கம் ஏற்றுக்கொண்டது. ஆனால் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் இது தொடர்பாக மீண்டும் டிஜிட்டல் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

அதோடு ஓடிடி தொடர்பான பிரச்னையையும் இப்போதே பேசித் தீர்க்க புதிய நிர்வாகிகள் முடிவு செய்திருக்கிறார்கள். சூரரைப் போற்று திரைப்படம் ஓடிடியில் வெளியானது திரையரங்கு உரிமையாளர்கள் மிகுந்த அதிருப்தியில் இருக்கிறார்கள். அதனால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி எந்தப் படமானாலும் திரையரங்குகளுக்கு வெளியிட நாங்கள் முன்னுரிமை கொடுக்கிறோம், அதேபோல எங்களுக்கும் சில சலுகைகளை அளிக்க வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவுசெய்ய தயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Rizwan
First published:

Tags: Tamil cinema Producer council