விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் பெயரில் உருவாக இருக்கும் குடியிருப்புகள்

news18
Updated: May 16, 2018, 7:25 PM IST
விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் பெயரில் உருவாக இருக்கும் குடியிருப்புகள்
சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதி
news18
Updated: May 16, 2018, 7:25 PM IST
விஜய்சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் பெயரில் திரைத்துறை தொழிலாளர்களுக்கான குடியிருப்புகள் உருவாக உள்ளதாக ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெஃப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் , “பெஃப்சி தொழிலாளர்கள் சம்மேளனத்தின் நிதியைக் கொண்டும் மற்ற சங்கங்களின் நன்கொடையைக் கொண்டும் சென்னையிலிருந்து 45 கிமீ தொலைவில் உள்ள பையனூரில் 6 கோடி செலவில் 10,000 சதுர அடி நிலப்பரப்பில் படப்படிப்புத் தளம் ஒன்று அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு அரங்கம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஜூலை மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இதை முறைப்படி திறந்து வைக்கவுள்ளார். பெஃப்சியின் முன்னாள் நிர்வாகி வி.சி.குகநாதன் அவர்கள் ஆசைப்பட்டது போல, பெஃப்ஸி தொழிலாளர்களுக்கு குடியிருப்பு அமைத்துத் தரவும் திட்டமிட்டுள்ளோம்.

அதன் முதற்கட்டமாக அன்றைய தினத்தில் 640 குடியிருப்புகள் கட்டுவதற்கு அஸ்திவாரம் அமைக்கப்படும். ஒவ்வொரு பிளாக்கிற்கும் 80 குடியிருப்புகள் வீதம் 8 பிளாக்குகளில் 640 குடியிருப்புகள் கட்டப்படும். அதில் முதல் பிளாக்கிற்கு விஜய் சேதுபதி உதவியதால் அவர் பெயரும், இரண்டாவது பிளாக்கிற்கு சிவகார்த்திகேயன் உதவியதால் அவர் பெயரும் வைக்கப்போகிறோம்.

100 ஆண்டுகளுக்கு பின்பும் நிற்கக்கூடிய இந்தக் கட்டிடத்துக்கு உதவ யார் வேண்டுமானாலும் முன்வரலாம். இந்தியாவிலே பெரிய படப்பிடிப்புத் தளமாக இது இருக்கும். இதைத் திரைப்பட நகரமாக உருவாக்க முயற்சிகள் செய்துவருகிறோம். தமிழ்நாட்டை மையமாக வைத்து எடுக்கும் படங்களை வெளியில் சென்று எடுப்பதைவிட இங்கேயே எடுத்தால் இங்கே இருக்கும் தொழிலாளர்களுக்கு உறுதுணையாக இருக்கும்" என்று கூறினார்.
First published: May 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்