• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சாலையோரவாசிகளுக்கு உணவளிக்கும் ஷகிலா - குவியும் பாராட்டுகள்!

சாலையோரவாசிகளுக்கு உணவளிக்கும் ஷகிலா - குவியும் பாராட்டுகள்!

ஷகிலா

ஷகிலா

பிரபலமாக இருந்தாலும், தன்னை கிளாமர் பெண்ணாக மக்களிடையே அறியப்படுவதை அவர் விரும்பவில்லை.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா ஊரங்கால் சாலையோரம் உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு உணவளித்து வரும் ஷகிலாவை நெட்டிசன்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

கிளாமர் மற்றும் நீலப் படங்கள் என திரைப்படங்களில் கோலோச்சிய ஷகீலாவின் இமேஜ் வெகுவாக மாறியுள்ளது. பிரபலமாக இருந்தாலும், தன்னை கிளாமர் பெண்ணாக மக்களிடையே அறியப்படுவதை அவர் விரும்பவில்லை. இந்த அடையாளத்தை மாற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி வந்த அவருக்கு விஜய் டீவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி நல்ல வாய்ப்பாக அமைந்தது.

அந்த ஷோவில் மற்ற போட்டியாளர்கள் போல் தானும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட ஷகிலா, சமையலில் விதவிதமான உணவுகளை சமைத்து அசத்தினார். மேலும், அவருடைய குணாதிசயமும் மக்களிடையே எளிதாக ரீச்சாகி, அனைத்தரப்பினரும் பாராட்டும்படியாக மாறியது. புகழ், சரத், பாலா, தங்கதுறை உள்ளிட்டோர் கோமாளிகளாக வந்த அந்த ஷோவில், அனைவரிடமும் இயல்பாகவும், தன்னுடைய குணம் மாறாமல் நடத்து கொண்டார். திரையில் பார்த்த ஷகிலாவுக்கும், குக் வித் கோமாளியில் பார்த்த ஷகிலாவுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை பார்த்த ரசிகர்கள், ரியாலிட்டி ஷோவில் வந்த சகிலாவின் உண்மையான குணத்தையே அதிகம் விரும்பினார்.

இதனால், கடந்த சில தசாப்தங்களாக மக்களிடையே அவருக்கு இருந்த இமேஜ் மாறியது. ஷகீலாவின் காமெடி மற்றும் கவுண்டர்களும் ரசிக்கும் வகையில் இருந்து வருகிறது. யூடியூப் சேனல்கள் அவரைத் தேடி தேடி பேட்டி எடுத்து வருகின்றனர். சமையல் கலைஞராக மாறிய ஷகிலா தற்றும் சமூக சேவகியாகவும் மாறியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் 2வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சாலையோரம் வசிப்பவர்கள் உள்ளிட்டோருக்கு இதனால் உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

அவர்களுடன் இணைந்திருக்கும் ஷகிலாவும், தன்னால் இயன்ற உதவிகளை செய்யத் தொடங்கியுள்ளார். சாலையோரம் வசிப்பவர்களுக்காக உணவுகளை வழங்கி வரும் அவர், அந்தப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். மேலும், அந்த புகைப்படத்துக்கு கீழ், நம்மிடம் இருக்கும் ஒரு கையை உதவிக்காகவும், மற்றொரு கையை பிறருக்கு உதவுவதற்காகவும் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அவரின் இந்த மெசேஜ் மற்றும் புகைப்படம் நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சமூக சேவையில் ஈடுபட்டு பிறரையும் ஈடுபடுமாறு அவர் அறிவுறுத்தியது, மகிழ்ச்சியளிப்பதாகவும், அவரின் பணி தொடரட்டும் என வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Also read... "கணவர் அடிக்கிறாரு" நேரலையில் அழுத ரசிகை - வி.ஜே ரம்யா கூறிய அட்வைஸ்!

மேலும், குக் வித் கோமாளி ஷோவிற்குப் பிறகு நல்ல ரோல்களில் நடிக்க அவருக்கு பட வாய்ப்புகள் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எது எப்படியோ? மக்களிடையே இருக்கும் தன்னுடைய இமேஜ் மாற வேண்டும் என அவர் ஆசைப்பட்டது இப்போது நிறைவேறியிருக்கிறது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: