ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நெட்ஃபிளிக்ஸ் யூசர்களுக்கு குஷியான செய்தி! புதிய ஸ்ட்ரீமிங் திட்டங்கள்... விலை குறையும் வாய்ப்பு

நெட்ஃபிளிக்ஸ் யூசர்களுக்கு குஷியான செய்தி! புதிய ஸ்ட்ரீமிங் திட்டங்கள்... விலை குறையும் வாய்ப்பு

நெட்ஃப்ளிக்ஸ்

நெட்ஃப்ளிக்ஸ்

நெட்ஃபிளிக்ஸ் குறைவான திட்டங்களை செய்ய விரும்பினால், அதில் விளம்பரங்களை பார்க்க வேண்டும்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

கடந்த இரண்டு நாட்களாக உலகம் முழுவதும் அதிகம் பேசப்பட்ட தலைப்புகளில் ஒன்று நெட்ஃபிளிக்ஸ். உலகின் முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்றான நெட்ஃப்ளிக்ஸ் சமீபத்தில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட சப்ஸ்க்ரைபர்களை இழந்துள்ளது என்ற தகவல் வெளியாகியது. அதை தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளில் இதுவரை குறையாத நெட்ஃபிளிக்ஸ் பங்குகள் மதிப்பு தடாலென்று சரிந்தது. இதன் காரணமாக நெட்ஃபிளிக்ஸ் புதிய ஸ்ட்ரீமிங் திட்டங்களை குறைந்த விலையில் அறிமுகப்படுத்த இருக்கிறது.

2022ம் ஆண்டில் முதன் குவார்ட்டரில் அதாவது மூன்று மாதங்களில் கிட்டத்தட்ட இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை நெட்ஃபிளிக்ஸ் இழந்துள்ளது. இந்த பத்தாண்டு காலத்தில் நெட்ஃபிளிக்ஸ் எதிர்கொண்ட முதல் இழப்பு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நெட்ஃப்ளிக்ஸின் ஸ்ட்ரீமிங் திட்டங்களின் சந்தா தொகையை மாற்றி அமைத்து தொகையைக் குறைக்கும் முயற்சியில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன. குறைவான விலையில் ஸ்ட்ரீமிங் திட்டங்களை, விளம்பரங்களுடன் அறிமுகம் செய்யலாம் என்று நெட்ஃபிளிக்ஸ் யோசிப்பதாக கூறப்படுகிறது.

குறைவான சந்தா ஆனால் இடையிடயே விளம்பரங்கள் :

இன்றைய இளைஞர்கள் ஓடிடி தளங்களை விரும்புவதற்கு முக்கியமான காரணம் விளம்பரங்கள் இல்லாமல் இருப்பதுதான். ஆனால் தற்போது அனைத்து இணைய எண்டர்டெயின்மெண்ட் சேவைகளும் கூடுதலாக சந்தா செலுத்தினால் மட்டும் தான் விளம்பரங்களை தவிர்க்க முடியும் என்று திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளனர். இதில் யூடியூபும் அடங்கும்.

நெட்ஃபிளிக்ஸ் குறைவான திட்டங்களை செய்ய விரும்பினால், அதில் விளம்பரங்களை பார்க்க வேண்டும் என்ற சூழல் ஏற்படும் பொழுது இது எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்கப்படும் என்பது இன்னும் தெரியவில்லை.

அடுத்த சில மாதங்களில் நெட்ஃபிளிக்ஸ் மேலும் பல லட்சம் வாடிக்கையாளர்களை இழக்கலாம் என்ற கணிப்பு வெளியாகியுள்ளதை தொடர்ந்து, இந்த மாற்றத்தை அமல்படுத்த வேண்டும் என்று நிறுவனம் செயல்பட்டு வருகின்றதாக செய்தி தகவல் வந்த வண்ணம் உள்ளன.

Read More : பேமென்ட்ஸ் ஆப் மூலம் பணம் செலுத்தும் முன் இதை உறுதி செய்து கொள்ளுங்கள்.. SBI அறிவுறுத்தல்

விளம்பரங்களுடன் வழங்கப்படும் புதிய சந்தா திட்டங்களை பற்றி ஆலோசனை செய்து வருவதாக நிறுவனம் கூறியிருக்கிறது. எனவே இதைப் பற்றி உறுதியான முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை. இதை உறுதி செய்யும் வகையில் கடந்த செவ்வாயன்று நெட்ஃப்ளிக்ஸின் முதலீட்டாளர்களில் ஒருவரும் மற்றும் இணை தலைமை செயல் அதிகாரியுமான ரீட் ஹேஸ்டிங்ஸ் “நாங்கள் மக்களின் தேவைக்கு ஏற்ப சந்தா விலையை மிகவும் குறைத்து அதில் விளம்பரங்களை சேர்ப்பதற்கு தயாராக இருக்கிறோம்.

மக்களின் விருப்பம் தான் எண்களின் விருப்பமும். அதே நேரத்தில் என்னுடைய தனிப்பட்ட விருப்பம் என்பது மிகவும் சிம்பிளான ஒரு ஸ்ட்ரீமிங் பிளான் தான். வாடிக்கையாளர்கள் குறைவான தொகையில் சந்தா செலுத்தி, விளம்பரங்களை பார்ப்பதற்கு தயாராக இருந்தால் நாங்கள் அதை செயல்படுத்த தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவை பொறுத்தவரை மற்ற ஓடிடி தளங்களைவிட நெட்ஃபிளிக்ஸ் சந்தா தொகை அதிகம் என்பதால் மற்ற ஓடிடி தளங்களுக்கு சப்ஸ்கிரைப் செய்த அளவுக்கு இந்தியாவில் நெட்ஃப்ளிக்ஸ் சப்ஸ்கிரைபர்கள் இல்லை. இந்த விலை குறைப்பது இந்தியாவில் நெட்ஃபிளிக்ஸை முன்னணி ஓடிடி தளமாக மாற்றமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

First published:

Tags: Movies, Netflix, OTT Release, TV series