• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஒரினச்சேர்க்கை, கௌரவ கொலை, மூன்றாம் பாலினம் வேறுபாடு... பாராட்டுகளை அள்ளும் 'பாவ கதைகள்' டிரெய்லர்

ஒரினச்சேர்க்கை, கௌரவ கொலை, மூன்றாம் பாலினம் வேறுபாடு... பாராட்டுகளை அள்ளும் 'பாவ கதைகள்' டிரெய்லர்

Youtube Video

ஓரினச்சேர்க்கை, கௌரவக் கொலை, மூன்றாம் பாலினத்தவரிடம் காட்டப்படும் வேறுபாடு என்ன பல நிகழ்வுகளையும் இயக்குனர்கள் படமாக்கியுள்ளனர். 

  • Share this:
    தமிழ் சினிமாவின் 4 முன்னணி இயக்குனர்கள் இணைந்து உருவாக்கியுள்ள பாவ கதைகள் என்ற புதிய திரைப்படத்தின் முன்னோட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    சூரரை போற்று திரைப் படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா, அசுரன் திரைப்படத்தை இயக்கிய வெற்றிமாறன், இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து நான்கு குறும்படங்களை இயக்கி அதனை ஆன்தாலஜி திரைப்படமாக வெளியிடுகின்றனர். பாவ கதைகள் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் முன்னோட்டம் ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது.



    நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சாந்தனு பாக்கியராஜ், ஜெயராம் காளிதாஸ் ஆகியோரோடு நடிகைகள் அஞ்சலி சிம்ரன் சாய்பல்லவி ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் ஓரினச்சேர்க்கை, கௌரவக் கொலை, மூன்றாம் பாலினத்தவரிடம் காட்டப்படும் வேறுபாடு என்ன பல நிகழ்வுகளையும் இயக்குனர்கள் படமாக்கியுள்ளனர்.  தற்பொழுது பாவ கதைகள் NETflix வலைதளத்தில் வெளியாக உள்ளது. வெளியான சில மணி நேரத்திலேயே பாவ கதைகளின் முன்னோட்டத்தை இணையதளத்தில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: