கொரோனா காலகட்டத்தில் மக்களிடையே நிறைய படங்களும் சீரீஸ்களும் விளையாட்டுகளும் அறிமுகமாகியது. சரசர வென்று மக்களிடையே பரிச்சயம் ஆகி பிரபலமும் ஆனது. அதில் ஒன்று தான் ஸ்க்விட் கேம். ரெட் லைட், கிரீன் லைட் என்று வீட்டில் குழந்தைகள் சொல்லி விளையாடிய நிகழ்வுகளும் நடந்துள்ளது. அந்த பொம்மையைப் போலவே உடை அனைத்து ரீல்ஸ் செய்து
வைரல் ஆகியதும் பார்த்திருப்போம். இவ்வளவு பிரபலமான ஸ்க்விட் கேமின் இரண்டாவது சீசன் என்றால் சும்மாவா?
'ஸ்க்விட் கேம்'இன் முதல் சீசன் நெட்ஃபிக்ஸ்ஸின் மிகப்பெரிய தொலைக்காட்சி நிகழ்ச்சியாகக் குறிக்கப்பட்டது; கடந்த காலத்தில் வெளியான நிகழ்ச்சிகளிலேயே முதல் நான்கு வாரங்களில் 1.65 பில்லியன் மணிநேரப் பார்வையைப் பதிவுசெய்து சாதனை படைத்தது. ஜனவரியில், நெட்ஃபிக்ஸ் இணை தலைமை நிர்வாக அதிகாரி டெட் சரண்டோஸ் ஸ்க்விட் கேமின் மேலும் எபிசோடுகள் வருவதை வெளியிட்டிருந்தார். இப்போது நெட்ஃபிளிக்ஸ் நிறுவனமே அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மேலும் ஞாயிற்றுக்கிழமை தனது டுவிட்டர் பக்கத்தில் சுருக்கமான டீசரையும் வெளியிட்டுள்ளது.
அது மட்டுமின்றி ஸ்க்விட் கேமின் எழுத்தாளர், இயக்குனர் மற்றும் நிர்வாக தயாரிப்பாளர் ஹ்வாங் டோங்-ஹ்யுகின் ஒரு சிறிய வீடியோ கிளிப்பையும் வெளியிட்டுள்ளார். இரண்டாம் சீசன் பயணத்திற்கு எந்த கதாபாத்திரங்கள் திரும்பி வருகின்றன என்பதைப் பற்றிய விவரங்களை அதில் வெளியிட்டுள்ளனர்.
ஹ்வாங் தனது அறிக்கையில், "'ஸ்க்விட் கேம்' முதல் சீசனை உயிர்ப்பிக்க 12 ஆண்டுகள் ஆனது. ஆனால் 'ஸ்க்விட் கேம்' மிகவும் பிரபலமான நெட்ஃபிக்ஸ் தொடராக மாற 12 நாட்கள் மட்டுமே ஆனது. எழுத்தாளராக, 'ஸ்க்விட் கேம்' ஐ எழுதி இயக்கி வெளியிட்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு எங்கள் நிகழ்ச்சியை பார்த்து நேசித்ததற்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.
சர்வதேச அளவில் தயாராகப் போகும் சூர்யாவின் 2 படங்கள்… ரசிகர்கள் உற்சாகம்
மேலும் இரண்டாம் சீசன் கதையில் கதாநாயகன் சியோங் கி-ஹன் (லீ ஜங்-ஜே) மற்றும் முகமூடி அணிந்த எதிரியான ஃபிரண்ட் மேன் (லீ பியுங்-ஹன்) இருவரும் திரும்பி வருவார்கள் என்பதை நகையாடலாக கூறியிருக்கின்றார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.