• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • வித்யாபாலனுடன் அஜித்... நன்றி சொன்ன இசையமைப்பாளர்!

வித்யாபாலனுடன் அஜித்... நன்றி சொன்ன இசையமைப்பாளர்!

அஜித்

அஜித்

  • News18
  • Last Updated :
  • Share this:
    இசையமைப்பாளர் ஜிப்ரான் வித்யாபாலனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தை அஜித் எடுத்ததாகவும், அதற்காக அவருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

    விஸ்வாசம் படத்தை அடுத்து சதுரங்க வேட்டை பட இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார் அஜித். பிங்க் படத்தின் ரீமேக்காக உருவாகும் இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.

    யுவன் சங்கர்ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். அஜித் இந்தப் படத்தில் வழக்கறிஞராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை வித்யாபாலன் நடிக்கிறார். ஆகஸ்ட் 10-ம் தேதி இந்தப் படம் திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    படிக்க: அஜித் சொன்ன ஒரே ஒரு வார்த்தைதான்... நெகிழ்ந்த இசையமைப்பாளர்...!

    இந்நிலையில் நடிகர் அஜித்தை சந்தித்த இசையமைப்பாளர் ஜிப்ரான். சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். அதில், “இது உண்மையான ரசிகனுக்கான தருணம். மற்றவர்கள் எல்லோரும் சொல்வதைப் போலவும், அதைக்காட்டிலும் மேலானராவராகவும் அஜித் இருக்கிறார். அவர் பேசிய வார்த்தைகளில் நம்ம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம் என்னும் ஒரே ஒரு வார்த்தை தான் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. நன்றி” என்று கூறினார்.

    தற்போது வித்யாபாலனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியாவின் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவர் வித்யாபாலன். இந்தப் புகைப்படத்துக்கு என்னால் போஸ் கொடுக்கமுடியவில்லை. ஏனென்றால் கேமராவிற்கு பின்னால் இருந்த அஜித்தை மட்டுமே எனது கண்கள் பார்த்துக்கொண்டிருந்தன. இந்தப் புகைப்படத்துக்காக அஜித்துக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.





    பார்க்க: ஆகஸ்ட் மாதம் ரிலீசாகும் ஹிட் படங்கள்... அஜித்தின் சென்டிமென்ட்!



    மகா கலைஞன் மகேந்திரன் - வீடியோ




    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.







    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: