நேர்கொண்ட பார்வை படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

வழக்கமாக, அஜித் குமாருக்கு ரசிகர்கள் வரவேற்பு மட்டும் இருந்துவந்த நிலையில், விஸ்வாசம் படத்தை பெரியவர்கள் ரசித்திருந்தனர்.

news18
Updated: July 15, 2019, 6:50 PM IST
நேர்கொண்ட பார்வை படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
நேர்கொண்ட பார்வை
news18
Updated: July 15, 2019, 6:50 PM IST
அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தை வினோத் இயக்கியுள்ளார்.

அந்தப் படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. வழக்கமாக, அஜித் குமாருக்கு ரசிகர்கள் வரவேற்பு மட்டும் இருந்துவந்த நிலையில், விஸ்வாசம் படத்தை பெரியவர்கள் ரசித்திருந்தனர்.
Loading...நேர்கொண்ட பார்வை படம் அஜித் குமார் ஆக்ஷனிலிருந்து மாறுபட்ட படம் என்பதால், ரசிகர்களிடம் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு குறைவாகவே நிலவிவருகிறது. அதனால், படத்தின் ரிலீஸ் தேதியை உறுதி செய்வதில் குழப்பம் நீடித்தது. இந்தநிலையில், நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Also see:

First published: July 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...