ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் அஜித் பட வில்லன்!

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் அஜித் பட வில்லன்!

இயக்குநர் மணிரத்னம்

இயக்குநர் மணிரத்னம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

    அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் வில்லனாக நடித்த அர்ஜூன் சிதம்பரம் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கல்கி எழுதிய வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக்கி வருகிறார் இயக்குநர் மணிரத்னம்.

    சமீபத்தில் இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் வெளியாகியது. அதன்படி இந்தப் படத்தில் நடிகர் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, சரத்குமார், நடிகர் பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

    லைகா நிறுவனம் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. படத்துக்கான கதையை மணிரத்னமும், குமரவேலும் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுத ஏ.ஆர்.ரஹ்மான் படத்துக்கு இசையமைக்கிறார்.

    தாய்லாந்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் கார்த்தி, ஜெயம் ரவி நடிக்கும் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகர் அர்ஜூன் சிதம்பரம் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

    படிக்க... பார்க்க: லெஜெண்ட் சரவணன் நடிக்கும் படத்தில் பாடல் காட்சிக்கு மட்டும் இத்தனை கோடியா?

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Ponniyin selvan