சித்தி 2 நிறுத்தப்படுகிறதா? சீரியல் நடிகை பதில்

சித்தி 2 நிறுத்தப்படுகிறதா? சீரியல் நடிகை பதில்

நேஹா மேனன்

ராதிகா சரத்குமார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடிப்பதை நிறுத்தப்போவதாக அதிர்ச்சியூட்டும் அறிவிப்பை வெளியிட்டார்.

 • Share this:
  சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 சீரியல் பிரபலமான தமிழ் சீரியல்களில் ஒன்றாகும். இந்த சீரியல் நிறுத்தப்படுவதாக சில செய்திகள் பரவின.

  இதற்கு நடிகை நேகா மேனன் பதிலளித்திருக்கிறார். அந்த சீரியலில் செவ்வந்தி கோமதிநாயகம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நேஹா, சித்தி 2 தொடர்பான அப்டேட்டுகளை பகிர்ந்துக் கொண்டார். அதிக கேள்விகளால் மூழ்கிப் போன நேகா அதற்கு இன்ஸ்டாகிராமில் பதிலளித்தார்.

  ஒரே நாளில் தியேட்டரிலும் ஓடிடி-யிலும் வெளியாகும் ’ஜகமே தந்திரம்’?

  ”நண்பர்களே சித்தி -2 முடிவுக்கு வரப்போவதில்லை! இதை பலர் இன்பாக்ஸில் என்னிடம் கேட்கிறார்கள்!
  நான் அதை வேடிக்கையாக சொன்னேன்… அதில் எந்த நோக்கமும் இல்லை! எனவே தோழர்களே சில்...” எனக் குறிப்பிட்டுள்ளார்.

  இதைக் கேள்விப்பட்டதும், சித்தி 2 சீரியல் ரசிகர்கள் நிம்மதி அடைந்திருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு, சித்தி 2 சீரியல் தயாரிப்பாளரும், முன்னணி நடிகையுமான ராதிகா சரத்குமார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடிப்பதை நிறுத்தப்போவதாக அதிர்ச்சியூட்டும் அறிவிப்பை வெளியிட்டார். இந்த செய்தி ஏற்கனவே அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் அரசியலில் அதிக கவனம் செலுத்த விரும்புகிறேன் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: