• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஹிந்தி பாடகி கர்ப்பமா?- வரிந்துகட்டிக்கொண்டு தேடிய நெட்டிசன்கள் - அவர் யார் தெரியுமா?

ஹிந்தி பாடகி கர்ப்பமா?- வரிந்துகட்டிக்கொண்டு தேடிய நெட்டிசன்கள் - அவர் யார் தெரியுமா?

படம் டிவிட்டர்

படம் டிவிட்டர்

ஆண்டு முழுவதும் அதிகம் தேடப்பட்ட தகவல்களிலும் கொரோனா வைரஸ் இடம்பெறவில்லை. அதற்கு மாறாக, ஐ.பி.எல் போட்டி, சினிமா நடிகர் மற்றும் நடிகைகள் தொடர்பான தகவல்களை தெரிந்துகொள்வதில் இந்தியர்கள் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர்

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகமே சோகப்பாடல் பாடிக்கொண்டிருக்கும் நிலையில், ஹிந்தி பாடகி கர்ப்பமானதாக வெளியான செய்தி குறித்து இந்தியர்கள் கூகுளில் அதிகளவு தேடியிருப்பது தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸால் உலக மக்கள் அனைவரும் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளதால், நாள்தோறும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகளே அதிகளவில் இடம்பிடித்தன. கொரோனா வைரஸ் பாதிப்பு, அதனை தடுக்க அரசு எடுக்கும் முயற்சிகள், தடுப்பூசி சோதனைகள் என ஆயிரக்கணக்கான செய்திகள் அனைத்து இணையதளங்களிலும், யூ டியுப்களிலும் செய்திகளாக பதிவிடப்பட்டன. ஆனால், இந்தியர்கள் கொரோனா வைரஸ் குறித்த செய்திகளை அதிகளவில் தேடவில்லை என்ற தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. 

கூகுள் search engine-ல் பதிவாகியுள்ள தரவுகளின்படி, இந்தியர்கள் அதிகளவு ஐ.பி.எல் தொடர்பான தகவல்களை தேடியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. அதிலும் டிசம்பர் 18ம் தேதி இந்தி பாடகி நேஹா கக்கரை இந்தியர்கள் அதிகம் தேடியுள்ளனர். இந்தி பின்னணி பாடகியான நேஹா கக்கர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், நேஹா கக்கர் கர்ப்பமாக இருப்பதுபோல் தெரிகிறது. 

இதனையடுத்து, நேஹா கக்கர் கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தி இணையத்தில் வைரலானது. ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்ததுடன், இணையத்தில் மீம்ஸ்களை உலவவிட்டனர் . ஆனால், புகைப்படத்தை பதிவிட்ட அடுத்த நாள் விளக்கம் ஒன்றை கொடுத்த நேஹா கக்கர், தான் கர்ப்பம் அடையவில்லை, புதிதாக வெளியிடவுள்ள  'Khyaal Rakhya Kar' என்ற பாடலின் புரோமோஷனுக்காக அந்த புகைப்படத்தை பதிவிட்டதாக கூறியிருந்தார். 

Also read... ஆரி தான் பிக்பாஸ் டைட்டில் வின்னர் - பிரபல இசையமைப்பாளர் கருத்து

இருப்பினும், கடந்த சில நாட்களாக நேஹா கக்கர் கர்ப்பம் பற்றிய செய்திகளை தெரிந்து கொள்வதில் மட்டுமே இந்தியர்கள் அதிக ஆர்வம் காட்டியிருப்பது கூகுள் search engine data மூலம் தெரியவந்துள்ளது. தற்போதைய நிலையில், இந்தியாவில் 3,08,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 26 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 341 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் கொரோனா இறப்பு 1,45,477 ஆக உயர்ந்துள்ளது. 

ஆனால் இதைப்பற்றியெல்லாம் துளியும் கவலையடையாமல் பாடகியின் கர்ப்பம் பற்றிய செய்தியை தெரிந்துகொள்ள அதிகம் பேர் ஆர்வம் காட்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆண்டு முழுவதும் அதிகம் தேடப்பட்ட தகவல்களிலும் கொரோனா வைரஸ் இடம்பெறவில்லை. அதற்கு மாறாக, ஐ.பி.எல் போட்டி, சினிமா நடிகர் மற்றும் நடிகைகள் தொடர்பான தகவல்களை தெரிந்துகொள்வதில் இந்தியர்கள் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர். மேலும், கொரோனா உள்ளிட்ட தகவல்களைக்காட்டிலும் What is Binod? என்பது குறித்து விளக்குமாறு கூகுள் queries-ல் அதிகம் பேர் கேட்டுள்ளனர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: