முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விஜய்யா? விஷாலா?... யாருக்கு வில்லி இந்த வரலட்சுமி சரத்குமார்?

விஜய்யா? விஷாலா?... யாருக்கு வில்லி இந்த வரலட்சுமி சரத்குமார்?

நடிகை வரலட்சுமி சரத்குமார்

நடிகை வரலட்சுமி சரத்குமார்

நான் விஜய்யின் ரசிகை என்பதால் அவருடன் நடிப்பது மகிழ்ச்சியாக இருந்தது என்று வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

நடிகை வரலட்சுமி சரத்குமார் 2018-ம் ஆண்டு விஷாலின் சண்டக்கோழி, விஜய்யின் சர்கார் ஆகிய படங்களில் வில்லியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் சிறந்த வில்லிக்கான தனியார் இணையதள விருது வரலட்சுமி சரத்குமாருக்கு கிடைத்தது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விருதை பெற்ற வரலட்சுமி, 2018-ம் ஆண்டின் கடைசியில் விருது பெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. விருது வழங்கியதற்கு என்று நன்றி தெரிவித்தார்

விருது வழங்கும் விழாவில் விஜய், விஷால் இருவரில் யாருக்கு வில்லியாக நடிப்பது சவாலாக இருந்தது என்ற கேள்விக்கு, நடிகை வரலட்சுமி,  ‘சண்டக்கோழி 2 படத்தில் அரிவாள், கத்தி என நிறைய ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதற்கான பயிற்சிகள் எடுக்க வேண்டியிருந்தது. சர்கார் படத்தில் நடிகர் விஜய்யுடன் நடிப்பது மகிழ்ச்சியாக இருந்தது. விஷாலை எனக்கு நன்றாக தெரியும். அதனால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் நடிகர் விஜய்யுடன் நடிக்கும் போது ஒரு பதட்டம் இருந்தது. நான் அவருடயை ரசிகை என்பதால் அவருடன் நடிப்பது மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் சினிமா படப்பிடிப்பு தளங்களில் குப்பை போடுவது தனக்கு பிடிக்காது என்றும் சர்கார் படத்தில் விஜய் பேசும் ‘ iam a corporate criminal' என்ற வசனத்தை பேசியும் அசத்தினார்.

Also watch:

First published:

Tags: Actor vijay, Actor vishal, Sandakozhi 2, Sarkar, Varalakshmi sarathkumar