வெளி மாநிலத்தில் நீட் தேர்வு - உதவிக்கரம் நீட்டும் திரைத்துறையினர்

news18
Updated: May 4, 2018, 7:23 PM IST
வெளி மாநிலத்தில் நீட் தேர்வு - உதவிக்கரம் நீட்டும் திரைத்துறையினர்
நீட் தேர்வுக்கு உதவிக்கரம் நீட்டிய நட்சத்திரங்கள்
news18
Updated: May 4, 2018, 7:23 PM IST
வெளி மாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுதச் செல்லும் தமிழக மாணவர்களுக்கு திரைத்துறையினர் பலரும் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், ஏழை மாணவர்களிடத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்தாண்டு எம்.பி.பி.எஸ் படிப்பிற்கு மட்டும் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் இந்தாண்டு சித்தா, யுனானி என அனைத்து வகையிலான மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு எழுத வேண்டியுள்ளதால் அதிகப்படியான மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்துள்ளனர்.

வரும் 6-ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு , தமிழகத்தில் இருந்து சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்  இந்நிலையில் பத்து நகரங்களில் மட்டுமே தேர்வு நடைபெற உள்ளதால், மாணவர்களுக்கு விரும்பிய தேர்வு மையங்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலையைக் கருத்தில் கொண்டு நடிகர் பிரசன்னா, நடிகை கஸ்தூரி, அருள்நிதி, காயத்ரி ரகுராம் ஆகியோர் உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளனர். இது குறித்து தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டும் உள்ளனர்.

கஸ்தூரி ( நடிகை):
பாலக்காடு , எர்ணாகுளம் சென்டர்களில் நீட் தேர்வு எழுத வேண்டிய பிள்ளைகளுக்கு தங்கும் இடம் , உணவு ஏற்பாடு செய்து தருகிறேன். உங்கள் ஹால் டிக்கெட், பயணவிபரம் வாட்ஸ் ஆப் - ல் அனுப்பவும் . தொடர்புக்கு- 9789895953.
Loading...அருள்நிதி ( நடிகர் ) :
அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வுக்காக வெளிமாநிலங்களுக்கு செல்லும் 20 மாணவர்களுக்கு உதவி செய்ய தான் தயார் என தெரிவித்து அதற்கான தொடர்பு எண்ணையும் பதிவிட்டுள்ளார் . தொடர்பு எண்: 9841777077பிரசன்னா ( நடிகர்):

தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் 2 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உதவ தான் தயார் என்றும் . உதவி தேவைப்படும் மாணவர்கள் தங்களது ஹால் டிக்கெட் , முகவரி உள்ளிட்ட்வற்றை தனக்கு அனுப்புமாறு தெரிவித்துள்ளார்.காயத்ரி ரகுராம் (நடிகை):
நான் பணப்படைத்தவர் அல்ல. இருப்பினும்  நீட் தேர்வு எழுத செல்லும் ஒரு மாணவரின் பயணம், தங்குமிடம் , உணவு ஆகியவைக்கு உதவ முடிவு எடுத்துள்ளேன். என தெரிவித்துள்ளார்.

First published: May 4, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்