Neelima Rani : நீங்கள் பிராமணரா?...குடிப்பீங்களா? கமெண்ட்ஸ்களுக்கு நீலிமாவின் நெத்தியடி பதில்

நீலிமா

நீங்க குடிப்பீங்களா? என்ற கமென்ட்டிற்கு, கண்டிப்பா. நான் பயங்கர குடிகாரி..குடிப்பது என்பது தனிப்பட்ட விஷயம். அதை பற்றி பொதுவெளியில் கேட்க கூடாது. சோஷியல் ட்ரிங்க் வேறு. ஆனால், குடி குடும்பத்தை கெடுக்கும்.ஜூஸ் குடிப்பேன் என தெரிவித்தார்.

 • Share this:
  சீரியல், சினிமா, தொகுப்பாளினி, தயாரிப்பாளர் என பல அடையாளங்களைக் கொண்டுள்ள நடிகை நீலிமா ராணி, தற்போது சீரியல்களுக்கு சற்று இடைவெளி விட்டிருக்கிறார். சினிமாவில் தற்போது முழு கவனத்தையும் செலுத்தியிருக்கும் அவர், தனது இசை பிக்சர்ஸ் மூலம் ‘சகோ’ என்ற மியூசிக் வீடியோவையும் தயாரித்துள்ளார்.

  இவர் தற்போது அவரது யூடியூப் பக்கத்தில் அவரது ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவரது ரசிகர்கள் நீலிமா குறித்து அவரது யூடியூப் பக்கத்தில் பதிவிட்ட எதிர்மறை கமெண்ட்ஸ்களை மிகவும் பாசிட்டிவாக எடுத்துக்கொண்டு விளக்கம் கொடுத்துள்ளார். மேலும் இது போன்ற கமெண்ட்ஸ்களை போடுவதை நிறுத்தாதீர்கள். ஆனால் நீங்கள் போடும் கமென்ட்ஸ் எதிர் தரப்பில் இருப்பவர்களை எவ்விதம் சென்று சேருகின்றது என பாருங்கள் எனவும் கூறியுளளார்.

  வீடியோவில் பேசிய நீலிமா புத்தகம் படிப்பதில் நேரத்தை செலவிடுவது எனக்கு மிக மிக பிடிக்கும். எனக்கு தொலைக்காட்சி தேவைப்படவில்லை. எங்க வீடு ரொம்ப பெருசு. 12 பேர் ஒரு வீட்டில இருக்கோம். நடுல ஒரு டிவிய வச்சு 12 பேரும் அந்த டிவிய பாத்துக்குட்டு ஒருத்தர் ஒருத்தர் பேசிக்காம இருக்கிறது எனக்கு பிடிக்காது என கூறியுள்ளார்.

      
  View this post on Instagram

   

  A post shared by Neelima Esai (@neelimaesai)


   

  முதல் கமெண்ட்டாக இந்த மூக்குத்தி உங்கள் மூக்கிற்கு பொருத்தமாக இல்லை. பழைய பேஷனாக உள்ளது என்பதற்கு, நீலிமா பதில் சிரித்துக் கொண்டே மூக்கு குத்துவது எனது தனிப்பட்ட விருப்பம். அதுல என்னமாறி பின் போடணும் அப்டீன்றது என்னோட சாய்ஸ் என பதிலளித்துள்ளார். அடுத்ததாக தமிழரசன் என்பவர் போட்ட கமெண்டை படித்த நீலிமா, டிஸ்லைக் பட்டன் இருக்கும் போது டிஸ் லைக்குனு கமெண்ட் போட்டீங்க பாத்தீங்களா? ரியலி குட் என கூறினார்.

      
  View this post on Instagram

   

  A post shared by Neelima Esai (@neelimaesai)


   

  அடுத்த கமெண்ட்டை வாசித்த நீலிமா, என்னடி பண்ற இங்க உக்காந்து கிட்டு என படித்துவிட்டு பதில் அளித்த அவர், நமது தமிழர் பண்பாடு மரியாதை அளித்து பேசுவது. உங்கள் குடும்பத்தாரை நீங்கள் இவ்விதம் டி போட்டு பேசும் பழக்கம் கொண்டால் தயவு செய்து நிறுத்தி விடுங்கள். அன்போட, பாசத்தோடு கூப்பிடும் போது அது வேறு.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஆனால் நீங்கள் என்னை ரீச் பண்ண முடியாது என்பதற்காக இங்க உக்காந்து என்னடி பண்ற என கேட்பது முறை அல்ல என நான் நினைக்கிறேன் என்று பதில் அளித்துள்ளார். அடுத்ததாக இந்த லாக் டவுனில் நீங்க எங்க ஊரு சுத்துறீங்க? உங்களுக்கு அனுமதி யாரு தருகிறார்கள் என ஒருவர் கமெண்ட் பதிவிட்டுள்ளார். இதற்கு பதில் அளித்த நீலிமா, நான் லாக்டவுன் போடுறதுக்கு முன்னாடி ஊரை விட்டு வந்து விட்டேன். என கூறியுள்ளார்.

      
  View this post on Instagram

   

  A post shared by Neelima Esai (@neelimaesai)


   

  'சப்ப மூக்கி' ஒருவர் கமெண்ட் பதிவிட்டு இருந்தார் இதனை படித்துவிட்டு, “நான் சப்ப மூக்கிதான். என்ன பண்ணுறது? என் பொறப்பு இப்படி ஆகிடுச்சு. ஆனால், இந்த சப்ப மூக்கை வைத்துக்கொண்டே நான் இவ்வளவு தூரத்திற்கு வந்திருக்கேன். அதற்காக என்னுடைய இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு மிகப் பெரிய நன்றி” நீங்க ஏங்க நடிப்பை பார்க்காமல் மூக்கை மாட்டும் பார்க்கின்றீர்கள் என்று மிகவும் அமைதியாக பதிலளித்தார்.

  அலட்டல் ஜாஸ்தி உங்க பேச்சுல.. தயவு செஞ்சு நேச்சுரலா இருங்க..என்று ஒருவர் கமெண்ட் பதிவிட்டு இருந்தார் இதனை படித்துவிட்டு, இது தான் நான். இதுல உங்களுக்கு என்ன அலட்டல் தெரியுது. நேச்சுரல் என்றால் என்ன? அதனை எப்படி கண்டறிவது இவை அனைத்தையும் நீங்கள் எனக்கு கூறினால் நான் முயற்சிக்கிறேன் நேச்சுரலாக இருக்க என பதில் அளித்துள்ளார்.

      
  View this post on Instagram

   

  A post shared by Neelima Esai (@neelimaesai)


   

  உங்க வாய்ஸ் பிக்பாஸ் விஜி மாறி இருக்கு என்று ஒருவர் கமெண்ட் பதிவிட்டு இருந்தார். அதற்கு பிக்பாஸ் விஜிக்கு இது தெரியுமா? நான் முதன் முதலாக இதனை கேள்விப்படுகிறேன். ஒருவர் எனது குரல் மற்றொருவரின் குரல் போல் உள்ளது என கூறுவதை. குக் வித் கோமாளி வாங்க என கேட்கப்பட்ட கேள்விக்கு..கண்டிப்பாக அவர்கள் அழைத்தால் வருவேன். தற்போது ஒரு குட்டி கோவிட் பிரேக் எடுத்துள்ளேன் என தெரிவித்தார்.

  நீங்க குடிப்பீங்களா? என்ற கமென்ட்டிற்கு, கண்டிப்பா. நான் பயங்கர குடிகாரி ..நிறைய தண்ணீர், ஜூஸ் குடிப்பேன். மேலும், குடிப்பது என்பது தனிப்பட்ட விஷயம். அதை பற்றி பொதுவெளியில் கேட்க கூடாது. சோஷியல் ட்ரிங்க் வேறு. ஆனால், குடி குடும்பத்தை கெடுக்கும் என தெரிவித்தார்.

      
  View this post on Instagram

   

  A post shared by Neelima Esai (@neelimaesai)


  நீங்கள் பிராமனாரா? என்றதற்கு, நான் மதவாதி அல்ல. ஆன்மீகவாதி மட்டுமே. மதம் நாம் உருவாக்கியது. ஆன்மிகம் நமக்கு உள்ளே இருப்பது. நான் ரம்ஜானுக்கு ஜோன்பு இருப்பேன். என்னுடைய அப்பா அம்மா பிராமணர்கள். கிறிஸ்துமஸ்க்கு சர்ச் வரை எல்லா வழிபாடுகளையும் பின்பற்றுவேன். என் பெற்றோர்கள் உட்பட நாங்க யாரும் ஜாதி, மதம் சார்ந்த விஷயங்களை ஆதரித்ததில்லை என்று விளக்கமளித்தார் நீலிமா.

  நெக்ஸ்ட் வாஷிங் மிஷின் டூர் போடுங்க ப்ளீஸ்... என்று ஒருவர் கமெண்ட் பதிவிட்டு இருந்தார். அதற்கு நீங்க பலர் வீடியோ பார்த்து பாதிக்கப்பட்டுள்ளேர்கள். வாஷிங் மிசின் டூர் போடுற அளவுக்கு எங்க வீட்டில இல்லை.என தெரிவித்தார்.

  சென்னையில் பிறந்து வளர்ந்த நீலிமா, தேவர்மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். 15 வயதில் புரஃபஷனலாக தனது கரியரை தொடங்கினார்.‘ஒரு பெண்ணின் கதை’ என்ற சீரியலில் நடிக்கத் தொடங்கிய நீலிமாவுக்கு, அடுத்தடுத்து நிறைய வாய்ப்புகள் வரத் தொடங்கின.’மெட்டி ஒலி’, ‘கோலங்கள்’ போன்ற சீரியல்களில் நடித்துக் கொண்டு, மறுபுறம் திரைப்படங்களிலும் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

     ’நான் மகான் அல்ல’, ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் நீலிமா.இதில் ‘நான் மகான் அல்ல’ படத்தில் சிறந்த சப்போர்ட்டிங் கதாபாத்திரத்திற்காக, எடிசன் விருது வென்றார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  சீரியல்களைப் பொறுத்தவரை இறுதியாக, விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வந்த அரண்மனைகிளி சீரியலில் துர்கா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நீலிமா.நீலிமாவின் கணவர் இசைவாணன். இவர்களுக்கு அதிதி இசை என்ற அழகிய மகள் இருக்கிறார்.
  Published by:Sankaravadivoo G
  First published: