நஸ்ரியாவின் க்யூட் டான்ஸ் வீடியோ!

நஸ்ரியாவின் க்யூட் டான்ஸ் வீடியோ!

நஸ்ரியா

தற்போது நஸ்ரியா ஒரு நடன வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

 • Share this:
  ஃபஹத் பாசில் மற்றும் நஸ்ரியா நஸிம் இருவரும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நட்சத்திர தம்பதிகளில் முக்கியமானவர்கள். இவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் ரசிகர்களை கவரும் விதத்தில் இருக்கும். அதோடு தனது படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் நஸ்ரியா அவ்வப்போது வீடியோக்களையும் பதிவிடுவார்.

  நஸ்ரியா நஸிம் 2014 ஆம் ஆண்டில் ஃபஹத் பாசிலை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்குப் பிறகு நடிப்பிலிருந்து விலகியிருந்த நஸ்ரியா, பிருத்விராஜ் மற்றும் பார்வதி இணைந்து நடித்த ‘கூட்’ படத்தில் ரீ எண்ட்ரி கொடுத்தார். இந்தப் படம் 2018 ஆம் ஆண்டு வெளியானது.   
  View this post on Instagram

   

  A post shared by Nazriya Nazim Fahadh (@nazriyafahadh)


  இதையடுத்து, அன்வர் ரஷீத் இயக்கிய டிரான்ஸ் படத்தில் கடைசியாக நடித்திருந்தார் நஸ்ரியா. அந்தப் படத்தில் அவரது கணவர் ஃபஹத் பாசிலுடன் ஜோடியாக நடித்தார். இந்தப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

  இந்நிலையில் தற்போது நஸ்ரியா ஒரு நடன வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் தனது தோழியுடன் இணைந்து அவர் நடனமாடுவதைப் பார்க்க முடிகிறது. நஸ்ரியாவின் இந்த க்யூட் டான்ஸ் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: