’உன் கண்ணுக்கு எதுவும் தெரியாது; ஆனா என் கண்ணுக்கு..’ வெளியானது நயன்தாரா நடித்த ’நெற்றிக்கண்’ டீசர்..

’உன் கண்ணுக்கு எதுவும் தெரியாது; ஆனா என் கண்ணுக்கு..’ வெளியானது நயன்தாரா நடித்த ’நெற்றிக்கண்’ டீசர்..

நயன்தாராவின் நெற்றிக்கண் டீசர்

நடிகை நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி, அவர் நடித்துள்ள நெற்றிக்கண் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. திரில்லராக உருவாகியுள்ள  இப்படத்தை மிலண்ட் ராவ் இயக்கியுள்ளார்.

 • Share this:


  நடிகை நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி, அவர் நடித்துள்ள நெற்றிக்கண் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. திரில்லராக உருவாகியுள்ள  இப்படத்தை மிலண்ட் ராவ் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே சித்தார்த் நடித்த அவள் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது .இயக்குனர்  விக்னேஷ் சிவன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

  இந்தப் படத்தின் படப்பிடிப்பு சுமார் 80% முடிந்த நிலையில், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று ‘நெற்றிக்கண்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழுவினர் வெளியிட்டனர்.


  2015 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்து பெரும் வெற்றிபெற்ற படம் ‘நானும் ரவுடிதான்’. இப்படம் வெளியாகி நேற்றோடு 5 ஆண்டுகள் ஆகின்றன. அப்படத்தின் நினைவாக விக்னேஷ் சிவன் தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு ரவுடி பிக்சர்ஸ் என்று பெயரிட்டுள்ளார்.

  2011-ஆம் ஆண்டு வெளியான கொரியன் படமான 'ப்ளைண்ட்' படத்தின் ரீமேக் 'நெற்றிக்கண்' என்று தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

  Published by:Gunavathy
  First published: