• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பார்ட்டி மோடில் நயன்தாரா: வைரலாகும் குரூப் க்ளிக்!

பார்ட்டி மோடில் நயன்தாரா: வைரலாகும் குரூப் க்ளிக்!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்

நடிகை நயன்தாரா தனக்கு நெருக்கமானவர்களுடன் தீபாவளியைக் கொண்டாடியுள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

  • News18
  • Last Updated :
  • Share this:
    நடிகை நயன்தாரா தனக்கு நெருக்கமானவர்களுடன் தீபாவளியைக் கொண்டாடியுள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

    திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவின் படங்கள் சமீபகாலமாக தொடர் வெற்றியை பெற்று வருகின்றன. அறம் படம் தொடங்கி தொடர்ந்து வந்த கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் ஆகிய இரண்டு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராஜேஷ் இயக்கும் படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இதைத் தொடர்ந்து தனது 63-வது படமான ஐரா படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இந்தப் படத்தை லட்சுமி குறும்பட இயக்குநர் சர்ஜூன் இயக்குகிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.











    இந்த தீபாவளிக்கு தனது படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் திரைத்துறையிலிருக்கும் தனது நெருக்கமான நண்பர்களுடன் தீபாவளியை கொண்டாடியுள்ளார். இதில் இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகர் சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் அட்லி, கோலமாவு கோகிலா படத்தின் இயக்குநர் அட்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். வெடிச் சத்தமில்லாமல் நடந்த இந்த கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.



    இந்த புகைப்படங்களை பதிவிட்டிருக்கும் தொகுப்பாளர் டிடி , “சிறந்த மனிதர்களுடன் சேர்ந்து கொண்டாடும் போதுதான் ஒரு பண்டிகையே சிறப்பாக அமையும். இந்த ஒற்றுமை, மகிழ்ச்சி, அன்பு இன்னும் பல நாட்களுக்கு தொடரும்” என்று கூறியுள்ளார்.

    Also See: ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா? நயன்தாராவின் அசத்தல் போட்டோஸ்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: