• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நயன்தாரா பிறந்த நாளுக்கு விக்கி செய்த செயல் இதுதான்!

நயன்தாரா பிறந்த நாளுக்கு விக்கி செய்த செயல் இதுதான்!

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

தனது 34 வது பிறந்தநாளைக் கொண்டாடும் நயன்தாராவுக்கு திரைத்துறையினர் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அவரது நெருங்கிய நண்பரான விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தின் முகப்பு படத்தை நயன்தாராவின் புகைப்படமாக மாற்றியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    கேரளாவை பூர்வீகமாக கொண்ட நயன்தாராவின் இயற்பெயர் டயானா மரியம் குரியன். கல்லூரியில் படிக்கும்போது பார்ட் டைமாக மாடலிங் மற்றும் விளம்பர துறையில் நுழைந்த நயன்தாரா, அதன்மூலம் மலையாளத் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். பின்னர் சரத்குமாரின் ஐயா படத்தின் மூலம் தமிழிலும் நாயகியாக அறிமுகமானார்.

    தமிழில் 2-வது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்த நயன்தாரா, வந்த வேகத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக உயர்ந்தார். திரைத்துறையில் ஒருசில சறுக்கல்கள் இருந்தாலும் தொடர்ந்து தனக்கான இடத்தை அவர் தக்கவைத்துள்ளார். ரஜினிகாந்த்,அஜித், விஜய் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார்.

    இன்று தனது 34 வது பிறந்தநாளைக் கொண்டாடும் அவருக்கு திரைத்துறையினர் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அவரது நெருங்கிய நண்பரான விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தின் முகப்பு படத்தை நயன்தாராவின் புகைப்படமாக மாற்றியுள்ளார். அதுமட்டுமின்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டேட்டஸ் பகுதியில் நயன்தாராவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தும் விதத்தில் கேக் மற்றும் பலூன்களுடன் அலங்கரிக்கப்பட்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
















    நானும் ரவுடிதான் படத்துக்கு பிறகு நெருங்கிய நண்பர்களாக மாறிய நயன்தாரா - விக்னேஷ் சிவன் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில் இவர்களின் திருமண செய்திக்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

    புயல் பாதித்த பகுதிக்கு தாமதமாக வந்த வட்டாட்சியர் வாகனத்தை எரித்த பொதுமக்கள் - வீடியோ

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: