ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நயன்தாராவிடம் தோற்றுப்போன விக்னேஷ் சிவன்

நயன்தாராவிடம் தோற்றுப்போன விக்னேஷ் சிவன்

நயன்தாராவுடன் இயக்குநர் விக்னேஷ் சிவன்...

நயன்தாராவுடன் இயக்குநர் விக்னேஷ் சிவன்...

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா விளையாடிய `பேக்மேன் ஸ்மாஷ்’ வீடியோவை சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

  நானும் ரவுடிதான் படத்திற்குப் பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள். இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்த தகவலை இதுவரை இருவரும் ஏற்கவோ மறுக்கவோ இல்லை.

  இருவரும் வெளிநாடுகளுக்கு ஒன்றாக செல்வது சினிமா விழாக்களில் கலந்துக் கொள்வது என வெளிப்படையாக இருந்து வருகின்றனர்.

  சமீபத்தில் கலிஃபோர்னியாவில் நடைபெற்ற இசைநிகழ்ச்சி ஒன்றில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர். மேலும் தனியார் நிகழ்ச்சி ஒன்றில், விருது வழங்கும் மேடையில் ``வருங்கால கணவருக்கு நன்றி” என்று நடிகை நயன்தாரா பேசியிருந்ததார்.

  இந்நிலையில் சமீபத்தில் தனது 34-வது பிறந்தநாளைக் கொண்டாடிய விக்னேஷ் சிவன், நயன்தாராவுடன் வேகேஷன் சென்றுள்ளார். அப்போது இருவரும் பேக்மேன் ஸ்மாஷ் கேம் விளையாடியுள்ளனர். இந்த வீடியோவை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் 1050 புள்ளிகளை நயன்தாரா பெற்றுள்ளார். 700 புள்ளிகளை பெற்ற விக்னேஷ் சிவன் நயன்தாராவிடம் தோல்வி அடைந்துள்ளார்.


  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: Instagram, Nayanthara, Packman Smash game, Vacation, Vignesh Shivan