கூழாங்கல் திரைப்படத்தைக் கைப்பற்றிய நயன்தாரா - விக்னேஷ் சிவன்

கூழாங்கல் திரைப்படத்தைக் கைப்பற்றிய நயன்தாரா - விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் - நயன்தாரா

நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் ‘கூழாங்கல்’ திரைப்படத்தின் முழு தயாரிப்புக்கும் பொறுப்பேற்றுள்ளது.

  • Share this:
மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன் தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘நெற்றிக்கண்’ படத்தை தயாரித்திருக்கும் விக்னேஷ் சிவன், அதைத்தொடர்ந்து விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தையும் தயாரிக்கிறார். இதைத்தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பாரதிராஜா, வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்த ‘ராக்கி’ படத்தின் தமிழக உரிமையையும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

அந்த வரிசையில் தற்போது யுவன் சங்கர்ராஜா இசையில் பிஎஸ் வினோத் ராஜ் இயக்கிய ‘கூழாங்கல்’ திரைப்படத்தின் உரிமையை நயன்தாரா - விக்னேஷ் ஜோடி கைப்பற்றியுள்ளது. இதுகுறித்து இருவரும் கூட்டாக வெளியிட்டிருக்கும அறிக்கையில் கூறியுள்ளதாவது, “மிக அரிதான ஒரு நாள்தான். ஒரு படைப்பைப் பார்த்து வியந்து, நாம் இருக்கும் துறையை நினைத்துப் பெருமைகொள்ளும் எண்ணம் தோன்றும். அப்படி ஒரு நாளாக, இறுதிக்கட்டப் பணிகளில் இருந்த 'கூழாங்கல்' எனும் திரைப்படத்தைப் பார்த்தபோது தோன்றியது.

'கூழாங்கல்' பி.எஸ்.வினோத்ராஜின் முதல் படம். தலைப்பைப் போலவே படம் மிக எளிமையாக இருந்தாலும், அது எங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது. முழுக்க முழுக்க திறமையான புதுக் குழுவினராலும் நடிகர்களாலும் இயக்குநராலும் உருவான இத்திரைப்படத்தைப் பார்த்து பாராட்டுகளோடு மட்டும் நிற்காமல், தன்னுடைய பின்னணி இசையால் கூழாங்கல்லின் ஆன்மாவை மீட்டெடுத்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

இப்படத்தின் மூலமாக எங்களுக்குக் கிடைத்த திரை அனுபவத்தை நம் மக்கள் அனைவருக்கும் வழங்குவது மட்டுமல்லாது, சர்வதேச திரைப்பட விழாக்களிலும் கொண்டு செல்வது என முடிவு செய்து இப்படத்தின் முழு தயாரிப்பைப் பொறுப்பேற்றுள்ளோம். 
View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)


உங்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் இத்திரைப்படத்தை உங்களுக்காக வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்" இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..
Published by:Sheik Hanifah
First published: