• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Nayanthara Vignesh Shivan: நயன்தாரா விக்னேஷ் சிவனின் அடுத்தப் பட அறிவிப்பு!

Nayanthara Vignesh Shivan: நயன்தாரா விக்னேஷ் சிவனின் அடுத்தப் பட அறிவிப்பு!

விக்னேஷ் சிவன் - நயன்தாரா

விக்னேஷ் சிவன் - நயன்தாரா

ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • Share this:
    கோலிவுட்டின் பிரபல ஜோடி, நயன்தாரா விக்னேஷ் சிவனின் அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    ’நானும் ரவுடி தான்’ படத்தில் இணைந்த நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் அதன் பின்னர் காதலில் விழுந்தனர். இந்த ஜோடியின் படங்கள் இணையத்தில் வெளியாகி, மற்ற ஜோடிகளுக்கும் உறவு இலக்குகளை நிர்ணயித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே நயனும் விக்கியும், ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி சில திரைப்படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகிறார்கள்.

    Bharathi Kannamma: விரைவில் முடிகிறதா பாரதி கண்ணம்மா சீரியல்?



    இந்நிலையில், தற்போது அவர்கள் தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அறிமுக இயக்குநர் விநாயக் இயக்கும் ‘ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்’ என்கிற படத்தை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தத் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே நெற்றிக்கண், கூழாங்கல் போன்ற படங்களை தயாரித்திருக்கிறது. அதோடு செவன் ஸ்கிரீன் நிறுவனத்துடன் இணைந்து ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தையும் தயாரித்துள்ளது. இதில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: