• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சர்வதேச பட விழாவில் பாரம்பரிய உடையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன்!

சர்வதேச பட விழாவில் பாரம்பரிய உடையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன்!

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

சில நாட்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் தனது தயாரிப்பு நிறுவனம் கூழாங்கல்லை தயாரிக்கிறது என்பதை தெரியப்படுத்தினார்.

  • Share this:
    பட விழாவில் கலந்துக் கொண்ட நயன்தாரா - விக்னேஷ் சிவனின் புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

    கோலிவுட்டில் மிகவும் பிரபலமான ஜோடிகளில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா முக்கியமானவர்கள். இவர்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெரும். இதற்கிடையே விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் தயாரிப்பில் உருவான கூழாங்கல் படம் ரோட்டர் டாம் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டு விழாவில் அந்தப்படம் திரையிடப்பட்டது. அதில் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி கலந்துக் கொண்டது, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.



    சர்ப்ரைஸ் லவ் புரொபோசல் – நிச்சயதார்த்தம் செய்துக் கொண்ட ’பிகில்’ நடிகை!

    சில நாட்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் தனது தயாரிப்பு நிறுவனம் கூழாங்கல்லை தயாரிக்கிறது என்பதை தெரியப்படுத்தினார். சமீபத்திய விஷயம் என்னவென்றால், ஐ.எஃப்.எஃப்.ஆரில் படம் திரையிடலில் கலந்துக் கொண்ட நயன்தாரா விக்னேஷ் சிவனின் படங்கள் பகிரப்பட்டுள்ளன. தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் அந்த படத்தைப் பகிர்ந்து, ‘எங்கள் திரைப்படமான கூழாங்கல் படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குழு புகைப்படம்” எனக் குறிப்பிட்டிருந்தது. அதில் நயன்தாரா மஞ்சள் நிற பட்டு சேலையிலும், விக்னேஷ் சிவன் உள்ளிட்ட குழுவினர் வேட்டி சட்டையிலும் காட்சியளித்தனர்.

    இப்படத்தை பி.எஸ்.வினோத் ராஜ் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: