• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பேரழகியுடன் புத்தாண்டு கொண்டாட்டம்... அஜித்தாக மாறிய விக்னேஷ் சிவன்

பேரழகியுடன் புத்தாண்டு கொண்டாட்டம்... அஜித்தாக மாறிய விக்னேஷ் சிவன்

நயன்தாராமற்றும் விக்னேஷ் சிவன்

நயன்தாராமற்றும் விக்னேஷ் சிவன்

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் புத்தாண்டைக் கொண்டாட வெளிநாடு சென்றுள்ளனர். அதற்கான புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளன.

  • News18
  • Last Updated :
  • Share this:
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் புத்தாண்டைக் கொண்டாட வெளிநாடு சென்றுள்ளனர். அதற்கான புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளன.

அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கும் விஸ்வாசம் படம் பொங்கலன்று திரைக்கு வர இருக்கிறது. இயக்குநர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் தம்பி ராமையா, யோகி பாபு, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.



இந்தப் படத்தை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கும் படத்தில் நடிகை நயன் தாரா நடித்து வந்தார். அதேபோல் விஜய்யின் 63-வது படத்திலும் நாயகியாக நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

இதனிடையே கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தனது காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவனுடன் கொண்டாடிய நயன்தாரா தற்போது புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.



அதற்கான புகைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் விஸ்வாசம் படத்தில் அஜித் நயன்தாராவை பேரழகி என்று அழைப்பது போல் விக்னேஷ் சிவனும் வர்ணித்துள்ளார்.

பிரமாண்ட பெருமாள் சிலை திருவண்ணாமலை வந்த வீடியோ

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: