• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Exclusive | நாங்கள் பிரிந்து விட்டோமா... நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஒரே பதில்!

Exclusive | நாங்கள் பிரிந்து விட்டோமா... நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஒரே பதில்!

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

  • Share this:
நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவருக்கிடையே பிளவு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அதை இருவரும் மறுத்துள்ளனர்.

நானும் ரவுடிதான் படத்தில் விக்னேஷ் சிவனும், நயன் தாராவும் இணைந்து பணியாற்றிய போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. வெளிப்படையாக நாங்கள் காதலர்கள் தான் என்று இருவரும் சொல்லாவிட்டாலும், பிறந்தநாள், பண்டிகை கொண்டாட்டங்கள் என அனைத்திலும் இருவரும் ஒன்றாகவே இருக்கின்றனர். அதற்கான புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிடுவார்.



தற்போது மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பில் ஈடுபட்டிருக்கும் நயன்தாரா சுசீந்திரம் கோவில், பகவதி அம்மன் கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு விக்னேஷ் சிவனுடன் சென்று வந்தார். அதேபோல் கிறிஸ்துமஸ் பண்டிகையையும் தனது காதலருடன் இணைந்து கொண்டாடினார் நயன்தாரா.

ஆனால் அவரது புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படத்தில் விக்னேஷ் சிவன் இடம்பெறவில்லை. அதேபோல் சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சி நடத்திய விருது விழாவிலும் நயன்தாரா மட்டுமே கலந்து கொண்டார். இதைக் கவனித்த சிலர் இருவருக்குள்ளும் மனக்கசப்பு இருப்பதாகவும், திருமணத்துக்கு விக்னேஷ் சிவன் வற்புறுத்தியதால் நயன்தாரா அதற்கு மறுப்பு தெரிவிக்கவே இருவரும் பிரிந்துவிட்டதாகவும் தகவல்களைப் பரப்பினர். இதனால் இருவரது ரசிகர்களும் குழப்படமடைந்தனர்.



இந்நிலையில் இதுகுறித்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நாம் விசாரித்த போது, இது முற்றிலும் பொய் என்று மறுத்தனர். நயன்தாராவின் புத்தாண்டு கொண்டாட்டத்தில் விக்னேஷ் சிவன் இடம்பெற்றிருந்ததாகவும், வெளியான நயன்தாராவின் புகைப்படமே விக்னேஷ் சிவனால் எடுக்கப்பட்டது தான் என்றும் கூறப்பட்டது.

பட வேலைகளில் இருப்பதால் சமீபத்தில் ஜீ தொலைக்காட்சி விருது நிகழ்ச்சிகளிலும் விக்னேஷ் சிவன், நயன்தாரா உடன் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: