• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விக்னேஷ் சிவனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா - வைரலாகும் புகைப்படம்

விக்னேஷ் சிவனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா - வைரலாகும் புகைப்படம்

நயன்தாராமற்றும் விக்னேஷ் சிவன்

நயன்தாராமற்றும் விக்னேஷ் சிவன்

நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் ஒன்றாக கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

  • News18
  • Last Updated :
  • Share this:
    நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் ஒன்றாக கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கும் விஸ்வாசம் படம் பொங்கலன்று திரைக்கு வர இருக்கிறது. இயக்குநர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் தம்பி ராமையா, யோகி பாபு, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைப்பில் உருவாகியுள்ள படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.



    தற்போது பாஸ் என்கிற பாஸ்கரன் பட இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்றது. அப்போது அந்நாட்டு குழந்தை ஒன்று நயன்தாராவுடன் கொஞ்சி விளையாடிய வீடியோ வைரலானது.



    நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நயன்தாராவின் இயற்பெயர் டயானா மரியம் குரியன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    நாளை உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாட உள்ள நிலையில் படப்பிடிப்பின் காரணமாக முன்னதாகவே கிறிஸ்துமஸ் தினத்தை நயன்தாரா கொண்டாடியிருப்பதாக கூறப்படுகிறது.

    விஸ்வாசம் தவிர நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கொலையுதிர்காலம் படமும் ஜனவரி மாதத்தில் திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அ.ம.மு.க. பிரமுகருக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ உதவி? - வீடியோ

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: