நயன்தாரா பிறந்தநாளில் இந்து தமிழர் கட்சி வைத்த அதிரடி கோரிக்கை

நயன்தாரா பிறந்தநாளில் இந்து தமிழர் கட்சி வைத்த அதிரடி கோரிக்கை

நயன்தாரா

‘மூக்குத்தி அம்மன்’ படக்குழு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி கோரிககை வைத்திருக்கிறது.

  • Share this:
ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணன் இணைந்து இயக்கியுள்ள படம் மூக்குத்தி அம்மன். இதில் ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாரா, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட், இந்துஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

எல்.கே.ஜி படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. நிஜ கடவுளுக்கும், மனிதனால் உருவாக்கப்பட்ட கடவுளுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை கதையாக உருவாக்கி சமகால அரசியல் பிரச்னைகளையும் அதில் சேர்த்து நகைச்சுவை கலந்து ‘மூக்குத்தி அம்மனாக’ படைத்துள்ளனர் படக்குழுவினர்.

தீபாவளியை முன்னிட்டு ஓடிடி தளத்தில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்து தமிழர் கட்சி ‘மூக்குத்தி அம்மன்’ படக்குழு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறது.

இதுகுறித்து அக்கட்சி விடுத்திருக்கும் அறிக்கையில், ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் இந்துமத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்துவதாகவும், இந்து மத சாமியார்களை வில்லன்கள் போல் படத்தில் சித்தரிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் இந்து கடவுள் குறித்து அவதூறாக படமெடுத்த ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்பட காட்சிகளை நீக்க வேண்டும். அந்தப் படத்தின் தயாரிப்பாளரை திருப்பதி தேவஸ்தான ஆலோசனை கமிட்டி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். படக்குழுவினர் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்” என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நயன்தாரா பிறந்தநாளுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் அவர் நடித்த படம் குறித்து அதிரடி அறிக்கை வெளியிட்டிருக்கிறது இந்து தமிழர் கட்சி.

மேலும் படிக்க: நான் தனி மரமாக நிற்கிறேன் - எஸ்.ஏ.சந்திரசேகர் உருக்கம்

எதிர்ப்புகள் ஒருபுறம் எழுந்தாலும் இத்திரைப்படம் அரசியல்வாதிகளின் வரவேற்பையும் பெற்றுள்ளது. சமீபத்தில் படம் குறித்து ட்வீட் செய்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ’மதத்தின் பெயரால் சமகாலத்தில் நிகழும் கொடுமைகளையும், மதத்தைக் கொண்டு மக்களைப் பிரித்து வாக்குவேட்டையாட முற்படும் அரசியல் நாடகங்களையும் தோலுரிக்கும் #மூக்குத்தி_அம்மன் திரைப்படம் கண்டு வெகுவாக ரசித்தேன்.

மக்களை விழிப்பூட்டி எழச்செய்யும் வகையில் சமூகக்கருத்துக்களை நகைச்சுவையோடு தந்திருக்கிற இயக்குநர்கள் ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே. சரவணன் மற்றும் படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்திருந்தார்.
Published by:Sheik Hanifah
First published: