ஓடிடியில் வெளியான நயன்தாரா படம்...!

நயன்தாரா

ஏப்ரல் 9 கொரோனா பாதிப்பு தீவிரத்தை நோக்கி நகர்ந்த நிலையில் நிழல் வெளியானதால் ரசிகர்கள் அதிகளவில் திரையரங்குக்கு செல்லவில்லை. இந்நிலையில் அமேசான் பிரைமில் இப்படம் வெளியாகியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
நயன்தாரா நடித்த புதிய மலையாளப் படம் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.

தமிழில் பிஸியாக நடிக்கையிலும் மலையாளத்தில் அவ்வப்போது படங்களில் நடித்து வந்தார் நயன்தாரா. அவரது நடிப்பில் ஏப்ரல் 9 வெளியான த்ரில்லர் திரைப்படம் நிழல். நயன்தாரா இதில் எட்டு வயது சிறுவனின் தாயாக நடித்திருந்தார். குஞ்சாகா போபன் பிரதான வேடம் ஏற்றிருந்தார்

இந்தப் படத்தை அப்பு என்.பட்டாத்திரி இயக்கியிருந்தார். அடிப்படையில் இவர் ஒரு எடிட்டர். சிறந்த எடிட்டருக்கான மாநில அரசின் விருது வாங்கியவர். நிழல் இவரது முதல் படம். ஏப்ரல் 9 கொரோனா பாதிப்பு தீவிரத்தை நோக்கி நகர்ந்த நிலையில் நிழல் வெளியானதால் ரசிகர்கள் அதிகளவில் திரையரங்குக்கு செல்லவில்லை. இந்நிலையில் அமேசான் பிரைமில் இப்படம் வெளியாகியுள்ளது.

Also read... ரஜினியுடன் செல்பி - மோகன் பாபுவின் மகள் வெளியிட்ட புகைப்படம்!

நயன்தாரா மலையாளத்தில் கடைசியாக நடித்த படம் லவ் ஆக்ஷன் ட்ராமா. 2019 இல் இப்படம் வெளியானது. நிவின் பாலி நாயகன். ஆனால், படம் சரியாகப் போகவில்லை. அதற்கு முன் மம்முட்டியுடன் புதிய நியமம் படத்தில் நடித்தார்.

அதில் பள்ளி செல்லும் சிறுமியின் தாயாக நடித்திருந்தார். படம் ஹிட். அதற்கு முன் பாஸ்கர் தி ராஸ்கல் படத்திலும் சிறுமியின் தாயாக நடித்தார். அதுவும் ஹிட். நயன்தாரா தாயாக நடித்தால் படம் ஹிட் என்ற சென்டிமெண்டின் அடிப்படையில் நிழலும் ஹிட்டாகியிருக்க வேண்டும். கொரோனா இரண்டாம் அலை அதை தடுத்தது. இப்போது அமேசான் பிரைமில் வெளியாகி உள்ள நிலையில், அதிக பார்வையாளர்களை படம் சென்றடையும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: