ஷாருக்கான் - ஏ.ஆர்.ரஹ்மானுடன் கூட்டணி அமைத்த நயன்தாரா

நடிகை நயன்தாரா

‘ஹாக்கி உலகக் கோப்பை 2018’ புரமோஷன் பாடலில் ஷாருக்கான், நயன்தாரா இருவரும் நடித்துள்ளனர். இந்தப் பாடலுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்

 • News18
 • Last Updated :
 • Share this:
  ‘ஹாக்கி உலகக் கோப்பை 2018’ புரமோஷன் பாடலில் ஷாருக்கான், நயன்தாரா இருவரும் நடித்துள்ளனர். இந்தப் பாடலுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்

  2018-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி, நவம்பர் 28-ம் தேதி தொடங்கி டிசம்பர் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரில் நடைபெறும் இந்தப் போட்டியில், மொத்தம் 16 அணிகள் கலந்து கொள்கின்றன.

  இந்தப் போட்டிக்கான புரமோஷன் பாடலுக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஹாக்கியில் பலம் வாய்ந்த அணிகளுள் ஒன்றாகக் கருதப்படும் இந்திய ஹாக்கி அணியைப் பெருமைப்படுத்தும் விதமாகவும், அவர்களுக்கு உத்வேகம் மற்றும் ஊக்கம் அளிக்கிற விதமாகவும் இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.  ‘ஜெய் ஹிந்த் இந்தியா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் பாடலை, குல்ஸார் எழுதியுள்ளார். இந்தப் பாடலின் புரமோ வீடியோவை நேற்று ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார். இதில், ஷாருக் கான், நயன்தாரா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், இந்தியப் பாரம்பரியக் கலைகளும் இடம்பெற்றுள்ளன. இந்தப் பாடலில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து ஸ்வேதா மோகன், சிவமணி, நீதி மோகன், சாஷா திருப்பதி உள்ளிட்டோரும் பணியாற்றியுள்ளனர்.

  Published by:Sheik Hanifah
  First published: