• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Nayanthara: சர்வதேசத் திரைப்பட விழாக்களில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்திருக்கும் படம் தேர்வு!

Nayanthara: சர்வதேசத் திரைப்பட விழாக்களில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்திருக்கும் படம் தேர்வு!

விக்னேஷ் சிவன் - நயன்தாரா

விக்னேஷ் சிவன் - நயன்தாரா

கூழாங்கல் படத்துக்கு Pebbles என சர்வதேச பெயர் அளித்துள்ளனர். வெளிநாடுகளில் இந்தப் பெயரில்தான் கூழாங்கல் திரையிடப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
உலகின் முக்கியமான சர்வதேசத் திரைப்பட விழாக்களில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்திருக்கும் கூழாங்கல் திரைப்படம் திரையிட தேர்வாகியுள்ளது. 

ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்தை நயன்தாராவும், அவரது காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவனும் இணைந்து நிர்வகித்து வருகின்றனர். இந்த நிறுவனம் சார்பில் அவர்கள் தயாரித்திருக்கும் படம், கூழாங்கல். நடைமுறை வாழ்க்கையை யதார்த்தமாக அணுகி காட்சிப்படுத்தியிருக்கும் இந்தப் படத்தை பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படம் சர்வதேச அளவில் பல அங்கீகாரங்களை பெற்றுள்ளது.



பின்லாந்தில் நடக்கும் திரைப்பட விழாக்களில் மிட்நைட் சன் திரைப்பட விழா முக்கியமானது. இந்த வருடம் இவ்விழா ஜுன் 17 (நாளைமுதல்) ஜுன் 24 வரை நடைபெறுகிறது. இதில் கூழாங்கல் திரைப்படம் திரையிட தேர்வாகியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேபோல் லண்டனில் நடக்கும் லண்டன் இந்தியன் சர்வதேச திரைப்பட விழா முக்கியமானது. இந்த வருடம் ஜுன் 17 (நாளை முதல்) ஜுலை 4 வரை இத்திரைப்பட விழா நடக்கிறது. இதில் கூழாங்கல் திரைப்படம் திரையிடப்படுகிறது. முதலாவதாக 23 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சினி லூமியர் திரையரங்கிலும், 30 இரவு 8.30 மணிக்கு ரிச் மிக்ஸ் திரையரங்கிலும் கூழாங்கல் திரையிடப்படுகிறது.  

Also read... Jagame Thandhiram: ரசிகர்கள் விரும்பிக் கேட்ட புகைப்படத்தை வெளியிட்ட தயாரிப்பாளர்!

விரைவில் கூலாங்கல் திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர். அனேகமாக நேரடி ஓடிடி வெளியீடாக இப்படம் வெளிவரலாம் என்கிறார்கள் விமர்சகர்கள். கூழாங்கல் படத்துக்கு Pebbles என சர்வதேச பெயர் அளித்துள்ளனர். வெளிநாடுகளில் இந்தப் பெயரில்தான் கூழாங்கல் திரையிடப்படுகிறது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: