• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Nayanthara : நயன்தாரா நடிக்கும் த்ரில்லர் படப்பிடிப்பு தொடங்கியது

Nayanthara : நயன்தாரா நடிக்கும் த்ரில்லர் படப்பிடிப்பு தொடங்கியது

நயன்தாரா

நயன்தாரா

நயன்தாரா நடிப்பில் த்ரில்லர் திரைப்படம் ஒன்று தயாராகிறது. இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.

  • Share this:
    நாயகி மையத் திரைப்படங்களில் நயன்தாரா அதிகமாக நடிக்கிறார். அவரது நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் நெற்றிக்கண் திரைப்படமும் நாயகி மையத்திரைப்படமே. அதில் அவர் பார்வையிழந்தவராக வருகிறார். த்ரில்லாம் ஜானரில் அமைந்த திரைப்படம் அது. அத்துடன் ரஜினியுடன் அவர் நடித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாகிறது. 

    இந்நிலையில், புதிய திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்டார். இதனை ஜிஎஸ் விக்னேஷ் என்பவர் இயக்குகிறார். இவர் வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்தவர். இதுவொரு த்ரில்லர் திரைப்படம். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.



    Photos : உள்ளாடை மட்டும் அணிந்து போட்டோ ஷூட் செய்த ஷாலினி பாண்டே..



    இந்தப் படத்துக்கு நயன்தாராவின் மாயா உள்பட சில படங்களுக்கு இசையமைத்த ரான் ஈதன் யோஹன் இசையமைக்க, தமிழ் ஒளிப்பதிவு செய்கிறார். சென்னையில் சில வாரங்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பை நடத்திவிட்டு, இரண்டாம்கட்ட படப்பிடிப்புக்கு கோயம்புத்தூர் செல்லவுள்ளனர். இந்தப் படத்துடன் விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படமும் நயன்தாரா நடிப்பில் தயாராகி வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: