மீண்டும் ஒளிபரப்பாகும் சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்

நாயகி சீரியல்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் நாயகியும் ஒன்று. இத்தொடரில் ஆனந்தி கதாபாத்திரத்தில் நடித்து வந்த வித்யா பிரதீப்புக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

 • Share this:
  சன் டிவியில் ஒளிபரப்பாகி ஹிட் அடித்த தொடர்களில் ஒன்று நாயகி. இரண்டு சீசன்களாக ஒளிபரப்பான இந்த சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திலீப் ராயன் இத்தொடரில் நாயகியாக நடிக்க ஆரம்பத்தில் நடிகை விஜயலட்சுமி நாயகியாக நடித்தார். பின்னர் அவருக்கு பதிலாக வித்யா பிரதீப் மாற்றப்பட்டார். மேலும் நடிகை அம்பிகா, பாப்ரி கோஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

  முதல் சீசன் முடிவடைந்ததை அடுத்து இரண்டாவது சீசனில் நடிகை நக்‌ஷத்ரா, கிருஷ்ணா, அம்பிகா, பாப்ரி கோஷ் உள்ளிட்டோர் நடிக்க கதை விறுவிறுப்பாக சென்றது. ஆனால் இத்தொடர் ஆரம்பித்த சில மாதங்களிலேயே முடிவடைந்தது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் தற்போது கலைஞர் டிவியில் மீண்டும் இத்தொடர் ஒளிபரப்பப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.   
  View this post on Instagram

   

  A post shared by TAMILTVEXPRESS (@tamiltvexpresss)


  மார்ச் 1-ம் தேதி முதல் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8 மணிக்கு நாயகி சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சன் டிவியில் வெற்றியடைந்த பல முன்னணி தொடர்கள் மீண்டும் ஒளிபரப்பப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
  Published by:Sheik Hanifah
  First published: