Vijay Television: விஜய் டிவி-யின் புத்தம் புதிய சீரியலில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் பிரபல நடிகர்!

நவீன் வெற்றி உடன் சக நடிகர்கள்

புத்தம் புதிய இந்த தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ஹீரோவாக நடிகர் தீபக் தினகர், ஹீரோயினாக நக்ஷத்திரா நாகேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

  • Share this:
ஸ்டார் விஜய் டிவி-யில் தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் பேராதரவு பெற்ற பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. வித்தியாசமான மற்றும் சுவாரசியமான கதையுடன் கூடிய சீரியல்களை ஒளிபரப்பி சின்னத்திரை ரசிகர்களை ஸ்டார் விஜய் கவர்ந்து வருகிறது. இந்நிலையில் "தமிழும் சரஸ்வதியும்" என்ற புதிய சீரியலை விஜய் டிவி விரைவில் ஒளிபரப்ப உள்ளது. நீங்கள் விஜய் டிவி-யின் ரசிகர் என்றால் இந்த புத்தம் புதிய சீரியலுக்கான ப்ரமோ வீடியோவை சமீப நாட்களாக பார்த்திருப்பீர்கள்.

புத்தம் புதிய இந்த தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ஹீரோவாக நடிகர் தீபக் தினகர், ஹீரோயினாக நக்ஷத்திரா நாகேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இதனிடையே விஜய் டிவி-யில் ஒளிபரப்பாக உள்ள இந்த சீரியலில் நடிப்பதன் மூலம் சின்னத்திரை ரசிகர்களை மகிழ்விக்க உள்ளார் நடிகர் நவீன் வெற்றி. நீலி சீரியலில் சூர்யன் என்ற கேரக்டர் மூலம் சின்னத்திரையில் நடிகராக அறிமுகமானார் நவீன் வெற்றி. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'தேன்மொழி பி.ஏ' , ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் நவீன் வெற்றி. தேன்மொழி பி.ஏ சீரியலில் அரவிந்த் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2-வில் சூர்யா என்ற முக்கிய கேரக்டரில் நடித்தார். இதனிடையே கொரோனா பரவலுக்கிடையே இவருக்கும் சௌம்யா கோவிந்தன் என்பவருக்கும் கடந்த ஆண்டில் திருமணம் நடைபெற்றது. எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக காணப்படும் நடிகர் நவீன் வெற்றி, சமீபத்தில் "தமிழும் சரஸ்வதியும்" சீரியலில் தானும் ஒரு அங்கமாக இருக்க போகும் விஷயத்தை ரசிகர்களிடையே ஷேர் செய்தார். தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ஹீரோ தீபக் தினகரின் சகோதரனாக நடிக்கிறார் நடிகர் நவீன் வெற்றி.

Also read... Raja Rani 2: ராஜா ராணி 2 ஷூட்டிங் ஸ்பாட் - "அசிஸ்டன்ட் டைரக்டர் பரிதாபங்கள்" - வீடியோ இதோ!

மேலும் தனது தொழில் வாழ்க்கையில் இந்த வாய்ப்பு மற்றொரு படி. இது போன்ற ஒரு அற்புதமான நடிகர்கள் மற்றும் குழுவினருடன் பணியாற்றுவது தனக்கு கிடைத்துள்ள ஆசீர்வாதம் என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும் தனது நடிப்பு வாழ்க்கையின் தொப்பியில் பிரகாசிக்கும் நட்சத்திரத்தை சேர்த்த எனது ஹோம் சேனல் விஜய் தொலைக்காட்சிக்கு நான் எப்போதும் நன்றி கூறுகிறேன் என்றும் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.




இதனிடையே தனது இன்ஸ்டாவில் அவர் ஷேர் செய்துள்ள மற்றொரு போஸ்ட்டில் இத்தகைய கண்கவர் குழும நடிகர்களின் ஒரு பகுதியாக தான் இருப்பது மிகுந்த மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தை ஏற்படுத்துவதாக கூறி இருப்பதாக கூறி ஷூட்டிங் ஸ்பாட் ஃபோட்டோ ஒன்றை ஷேர் செய்து உள்ளார். அந்த ஃபோட்டோவில் நவீன் வெற்றியுடன் சேர்ந்து நடிகர் தீபக் தினகர், நடிகை ரேகா கிருஷ்ணப்பா, நடிகை மீரா கிருஷ்ணா, நடிகை தர்ஷ்னா உள்ளிட்டோர் இருக்கின்றனர். அந்த போஸ்டில் மேலும் சிலரை டேக் செய்துள்ள நவீன் "எதிலும் புதுமை. தமிழன் பெருமை" என்று இறுதியில் குறிப்பிட்டுள்ளார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: