ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Save Soil : 'மண் தான் மனிதனின் ஆதாரம்' - சத்குருவின் இயக்கத்திற்கு குரல் கொடுத்த தேசிய விருது பெற்ற பாடலாசிரியர் பா.விஜய்

Save Soil : 'மண் தான் மனிதனின் ஆதாரம்' - சத்குருவின் இயக்கத்திற்கு குரல் கொடுத்த தேசிய விருது பெற்ற பாடலாசிரியர் பா.விஜய்

பாடலாசிரியர் பா.விஜய்

பாடலாசிரியர் பா.விஜய்

Save Soil: தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான பா.விஜய், சத்குரு ஏற்படுத்தியிருக்கும் மண்காப்போம் அமைப்பு அனைத்து தரப்பு மக்களிடமும் போய் சேரும். இதன் மூலமாக ஒரு பெரிய மறுமலர்ச்சியும், மண் புரட்சியும் ஏற்படும் என நம்புகின்றேன் என கூறியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :

பா.விஜய், தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். ஆட்டோகிராப் படத்துக்காக எழுதிய ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலுக்காக 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியர் என்ற தேசிய விருதை பெற்றுள்ளார்.

இவர் சத்குருவின் மண் காப்போம் அமைப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் எடுத்துக் கூறியுள்ளார். அதில், நான் ஈஷாவிற்கு மகாசிவராத்திரி எனும் ஆன்மீகப் பெருவிழாவிற்கு வருகை தந்தேன். உள்ள பூர்வமான மகிழ்ச்சியாக அந்த தருணம் அமைந்தது. சத்குருவின் மிகப்பெரிய ஆன்மீக கூட்டமைப்பு இதெல்லாம் பார்க்கும் போது அதிலும் குறிப்பாக மண் காப்போம் எனும் தலைப்பில் அவர் முன்னெடுத்திருக்கும் மிகப்பெரிய முயற்சி உலக மக்களிடையே ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தும் என நான் நினைக்கின்றேன்.

ஏனென்றால் மண் தான் மனிதனின் ஆதாரம். இந்த மண் தான் ஒட்டு மொத்த மானுடத்தின் சிகரம். இந்த மண்ணை காக்க ஒரு பெரிய பேரியக்கத்தோடு எடுத்துள்ள முயற்சி கண்டிப்பாக அனைத்து தரப்பு மக்களிடமும் போய் சேரும். இதன் மூலமாக ஒரு பெரிய மறுமலர்ச்சியும், மண் புரட்சியும் ஏற்படும் என நம்புகின்றேன். அதனால் இந்த இயக்கத்திற்கு என்னுடைய வணக்கங்களையும் , வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். நன்றி என கூறியுள்ளார்.

சத்குரு தொடங்கி உள்ள மண்வளம் காப்போம் (SaveSoil) இயக்கத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஆன்டிகுவா & பார்படா, டொமினிகா, செயின்ட் லூசியா, செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் ஆகிய 4 கரீபியன் நாடுகளின் பிரதமர்கள் மற்றும் அமைச்சர்கள் தங்கள் பங்களிப்பை ஆற்றியுள்ளனர்.

உலகளவில் மண் வள பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 100 நாட்களில் 27 நாடுகளுக்கு சத்குரு அவர்கள் தனி ஆளாக 30 ஆயிரம் கி.மீ மோட்டார் சைக்கிளில் பயணிக்க உள்ளார். மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து தனது விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்கும் அவர் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் வழியாக இந்தியா வந்து தமிழ்நாட்டில் தனது பயணத்தை நிறைவு செய்ய உள்ளார்.

இதையும் படியுங்கள் : மண் காக்க லண்டன் முதல் தமிழ்நாடு வரை 30,000 கி.மீ பைக்கில் பயணிக்கும் சத்குரு!

மண்வளம் காக்க சமூக வலைத்தளங்களில் பலரும் தங்கள் பங்களிப்பை ஆற்றத் தொடங்கி விட்டனர். #LeLeLeLeLe எனும் ஹேஷ்டேக் மற்றும் #SaveSoil எனும் ஹேஷ்டேக் பெருமளவில் வைரலாகி வருகின்றது. நம் இந்திய நாடு மட்டும் இன்றி இதில் வெளிநாட்டு தன்னார்வலர்கள் சத்குருவை பின்பற்றுபவர்களும் தாமாக முன்வந்து குரல் கொடுக்கின்றனர்.

First published:

Tags: Sadhguru