உங்கள் கதையை சினிமாவாக்க வேண்டும் என்றதற்கு நடராஜன் கூறிய பதில்

உங்கள் கதையை சினிமாவாக்க வேண்டும் என்றதற்கு நடராஜன் கூறிய பதில்

டி.நடராஜன்.

சின்னப்பம்பட்டியில் பிறந்த நடராஜன், ஆஸ்திரேலிய தொடருக்காக இந்திய அணியில் வலைப்பயிற்சி பவுலராக சென்றார்.

 • Share this:
  தன் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க ஆசைப்படும் இயக்குநர்களுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பதிலளித்துள்ளார்.

  தமிழகத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து தனது கடின உழைப்பால், இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்திருக்கிறார் நடராஜன். சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் பிறந்த இவர், ஆஸ்திரேலிய தொடருக்காக இந்திய அணியில் வலைப்பயிற்சி பவுலராக சென்றார்.

  ஒரே நாளில் தியேட்டரிலும் ஓடிடி-யிலும் வெளியாகும் ’ஜகமே தந்திரம்’?

  பின்னர் ஒருநாள், 20 ஓவர், டெஸ்ட் போட்டிகளில் பங்கு பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ஆஸ்திரேலிய தொடருக்கு பின் தமிழகம் திரும்பிய நடராஜன், சில தினங்களுக்கு முன் பழனி முருகன் கோவிலுக்கு சென்று மொட்டை அடித்துக் கொண்டார். இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறிய நடராஜன் இந்திய அணியில் இணைந்தது பலருக்கும் ஊக்கமளித்திருக்கிறது. அதனால் அவரது கதையில், சினிமாவுக்கான கண்டெண்ட் இருப்பதாகக் கூறி பல இயக்குநர்கள் நடராஜனை தொடர்பு கொண்டு வருகிறார்களாம்.

  இது குறித்து சமீபத்தில் பேட்டியளித்த நடராஜன், ”எனது வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க இயக்குநர்கள் சிலர் என் வீடு தேடி வந்தனர். ஆனால் இப்போது எனக்கு அதில் ஆர்வம் இல்லை. கிரிக்கெட்டில் முழு கவனத்தையும் செலுத்த விரும்புகிறேன்” என்று விளக்கமளித்திருக்கிறார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: