இளைஞர்களுக்கான பொழுதுப் போக்கு படங்களில் நடித்த ஹிப் ஹாப் ஆதி, அடுத்ததாக கிராமப்புற உறவுகளை மையப்படுத்தும் ’அன்பறிவு’ படத்தில் நடிக்கிறார். இதனை இயக்குநர் அட்லீயின் முன்னாள் அசோசியேட்டான அஸ்வின் ராம் இயக்குகிறார். இதில் ஹீரோயினாக காஷ்மிரா பர்தேசி நடிக்கிறார். விதார்த், நெப்போலியன், சாய்குமார், தீனா மற்றும் சங்கீதா ஆகிய நட்சத்திரப் பட்டாளங்களும் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார்கள்.
அன்பறிவு மதுரையில் உள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் கதை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு குடும்பத்தில் பிறந்த மூன்று தலைமுறை ஆண்களுக்கு இடையிலான பிணைப்பைச் சுற்றி நகர்கிறதாம். "ஒரு இளைஞன், அவனது தந்தை மற்றும் தாத்தா இடையேயான உறவை இப்படம் மையப்படுத்துகிறது. தற்போது ”அமெரிக்காவிலிருக்கும் நெப்போலியன், ஆதியின் தாத்தா கதாபாத்திரத்தில் நடிக்க, சாய்குமார் அவரது தந்தையாக நடிப்பார்” என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்யாணி பிரியதர்ஷனின் கலக்கல் படங்கள்!
இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். படத்தில் ஆதி மதுரை ஸ்லாங்கில் பேசுவாராம். அன்பறிவு படத்தின் படப்பிடிப்பு தற்போது பொள்ளாச்சி, கோயம்புத்தூர் மற்றும் கேரளாவின் பழமையான இடங்களில் நடந்து வருகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்