நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசாகும் நந்தினி 2 சீரியல்?

நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசாகும் நந்தினி 2 சீரியல்?

நந்தினி 2

நந்தினி தொடரின் இரண்டாம் பாகம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Share this:
சுந்தர்.சி கதையில் ராஜ் கபூர் இயக்கத்தில் அவ்னி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவானது நந்தினி சீரியல். ராகுல் ரவி ஹீரோவாகவும், நித்யா ராம்,மாளவிகா வேல்ஸ் இருவரும் ஹீரோயின்களாகவும் நடித்திருந்தனர். மேலும் விஜயகுமார்,காயத்ரி,விஜயலட்சுமி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

விறுவிறுப்பாக சென்று வந்த இந்த தொடர் சுமார் 2 வருடங்கள் கழித்து தனது ஒளிபரப்பை நிறுத்தியது. இத்தொடரின் இரண்டாம் பாகத்தை தயார் செய்ய தயாரிப்பாளர்கள் சுந்தர் சி மற்றும் குஷ்பூ இருவருக்கும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து இந்த தொடரின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகளை தயாரிப்பு நிறுவனம் தொடங்கினர்.

இரண்டாவது சீசனில் விஷ்ணு உன்னிகிருஷ்ணன் ஹீரோவாக நடிக்கிறார். மேகாஸ்ரீ மற்றும் சாந்தனா சேகு இருவரும் ஹீரோயினாக நடித்தனர். ஜோதி என்ற டைட்டிலுடன் உருவாக்கப்பட்ட இந்த தொடரை அவ்னி புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க ராஜ்கபூர் இயக்கினார். ஆனால் ஷூட்டிங் தொடங்கி சில நாட்களிலேயே எதிர்பாராத காரணங்களால் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனிடையே இத்தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாகவும் பேச்சு அடிபட்டது.

இந்நிலையில் தற்போது சன் நெக்ஸ்ட் தளத்தில் ஜோதி சீரியல் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீரியல் கைவிடப்படுவதற்கு முன்பாக எடுக்கப்பட்ட எபிசோடுகள் ஒளிபரப்பாக உள்ளதா, மீண்டும் புதிய எபிசோட்கள் படமாக்கப்படுமா என்பது குறித்த தகவல்களும் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
Published by:Sheik Hanifah
First published: